பதிவு செய்த நாள்
13 ஏப்2018
01:12
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, பிப்ரவரியில், 7.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. எனினும், இது, ஜனவரியில், மறுமதிப்பீடு செய்யப்பட்ட, 7.4 சதவீத வளர்ச்சியோடு ஒப்பிடும் போது குறைவு.கடந்த, 2017, டிசம்பரில், தொழில் துறை உற்பத்தி, 7.1 சதவீதம்; நவம்பரில், 25 மாதங்களில் இல்லாத அளவில், 8.4 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.பிப்ரவரியில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, மாற்றமின்றி, 8.7 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், 4.6 சதவீதம் என்ற அளவில், பின்னடைவில் இருந்த, நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி, 7.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.மின் துறை உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதத்தில் இருந்து, 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.தயாரிப்பு துறையில், 23 தொழில் பிரிவுகளில், 15 பிரிவுகளின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது.கடந்த 2017 -– 18ம் நிதியாண்டில், ஏப்., – பிப்., வரையிலான, 11 மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 4.7 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|