தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லரை பணவீக்கம் குறைந்தது தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லரை பணவீக்கம் குறைந்தது ... ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வரி சலுகை சுலபமாக முதலீடுகளை திரட்ட வாய்ப்பு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வரி சலுகை சுலபமாக முதலீடுகளை திரட்ட ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பாக்­கெட்டை பதம் பார்க்­காத விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2018
01:17

மக்­களின் நுகர்வு குறைந்­த­தால் காய்­கறி, பழம் மற்­றும் மலர் சந்­தை­களில் பொருட்­களின் விலை குறைந்த நிலை­யி­லேயே உள்­ளது.
காய்­கறி
கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில், பச்­சைப் பட்­டாணி ஒரு கிலோ, 80 ரூபா­யாக உள்­ளது. 25 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், 45 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மற்­ற­படி, முட்­டை­கோஸ், பீட்­ரூட், பெரிய வெங்­கா­யம், வாழை உள்­ளிட்­டவை, 8 – 15 ரூபா­யாக உள்­ளது.சேப்­பங்­கி­ழங்கு, 60 ரூபாய்க்கு உயர்ந்­துள்­ளது. பச்சை மிள­காய், 50 ரூபா­யி­லி­ருந்து, 25 ரூபா­யாக குறைந்­துள்­ளது. சின்ன வெங்­கா­யம், புட­லங்­காய், 20 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கின. வாழைக்­காய், 5 –- 8 ரூபா­யாக உள்­ளது. முருங்­கைக்­காய், 5 உள்ள கட்டு, 5 – -10 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கின.புதினா, கொத்­த­மல்லி உள்­ளிட்­டவை ஒரு ரூபாய்க்கு விலை குறைந்து காணப்­பட்­டது. சோளம் ஒரு கிலோ, 20 ரூபாய்க்­கும், மாங்­காய் ஒரு கிலோ, 40 ரூபாய்க்­கும் விற்­கப்­பட்­டன.மாங்­காய் வகை­களில் ஆந்­தி­ரா­வில் இருந்து வரத்து துவங்­கி­யுள்­ளது. இதில், கிளி­மூக்கு, நாட்டு மாங்­காய், ருமானி, உள்­ளிட்ட மாங்­காய் வகை­கள் விற்­ப­னைக்கு வந்­துள்ளன. இவற்­றின் விலை ஒரு கிலோ,30 – 40 ரூபாய் வரை உள்­ளது.
பழ வகை­கள்
நுகர்வு குறைந்­த­தால், 2வது நாளாக திராட்சை விலை குறைந்தே காணப்­பட்­டது. 10 கிலோ திராட்சை, 400 –- 500 வரை விற்­ப­னை­யா­கின. மாதுளை, 10 கிலோ 1,300 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சாத்­துக்­குடி ஒரு கிலோ, 41 – 48 ரூபா­யாக இருந்­தது.ஆந்­தி­ரா­வில் இருந்து கிர்­ணிப்­ப­ழங்­கள் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. மொத்த விலை­யில் குறைந்­த­பட்­சம் ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. கேர­ளா­வில் இருந்து வந்­துள்ள அன்­னாசி சில்­லரை விலை­யில் ஒரு கிலோ, 40 ரூபா­யாக உள்­ளது. கமலா வரத்து முற்­றி­லும் நின்று விட்­டது. தற்­போது ஏற்­று­மதி ரக கமலா வகை­களே விற்­ப­னைக்கு வரு­கின்றன. பொள்­ளாச்சி, கேர­ளா­வில் இருந்து வரும் பலாப்­ப­ழம், ஒரு கிலோ, 40 ரூபா­யாக உள்­ளது.
மலர் வகை­கள்
கோயம்­பேடு மலர் சந்­தை­யில், மல்லி விலை, 2வது நாளாக குறைந்தே காணப்­பட்­டது. ஒரு கிலோ மல்லி, 180 – 250 வரை விற்­ப­னை­யா­னது. சாமந்தி, 200 – 400 ரூபாய் வரை­யி­லும், கன­காம்­ப­ரம் ஒரு கிலோ தரத்­திற்கு ஏற்ப, 200 – 600 ரூபாய் வரை­யி­லும் விற்­ப­னை­யா­கின.ரோஜா ஒரு கிலோ, 30 – 80 ரூபாய் வரை விற்­ப­னை­யா­னது. சென்டை ஒரு கிலோ, 60 ரூபா­யாக இருந்­தது. தாமரை ஐந்து பூ, 10 ரூபா­யாக விற்­ப­னை­யா­னது. அலங்­கா­ரத்­திற்கு பயன்­படும் டேரி வகை மலர் ஒரு கிலோ, 80 ரூபா­யா­க­வும், கோழிக்­கொண்டை ஒரு கிலோ, 40 ரூபா­யா­க­வும் இருந்­தன.மொத்­தத்­தில், மக்­க­ளுக்கு பாக்­கெட்டை அதி­கம் பதம் பார்க்­காத வகை­யி­லும், வியா­பா­ரி­க­ளுக்கு சுமா­ரா­க­வும் கோயம்­பேடு சந்தை நேற்று இருந்­தது.
-– நமது நிரு­பர் –-

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)