பதிவு செய்த நாள்
15 ஏப்2018
00:06
பெங்களூரு:இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாவது பெரிய நிறுவனமாக இன்போசிஸ் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, சலீல் பரேக் பதவியேற்ற பின், முதல் முழு காலாண்டு நிதிநிலை அறிக்கை, வெளியாகி உள்ளது.
அதில், 2017- – 18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 3,690 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, அக்டோபர் – டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ஈட்டப்பட்ட, 5,129 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது, 28.2 சதவீதம் குறைவாகும்.
இந்நிறுவனம், 2016 -– 17ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 3,603 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தது.மதிப்பீட்டு காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை, 1.6 சதவீதம் உயர்ந்து, 18,083 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
இந்நிறுவனம், நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், டாலர் அடிப்படையிலான வருவாய் வளர்ச்சி, 7 – 9 சதவீதமாக இருக்கும் என, தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|