கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘பான் கார்டு’ விதிமுறை தளர்வுகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘பான் கார்டு’ விதிமுறை தளர்வு ... பொது காப்­பீடு பிரீமியம் உயர்வு பொது காப்­பீடு பிரீமியம் உயர்வு ...
அமெரிக்கா – சீனா வர்த்தக போர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2018
00:10

கடந்த ஒரு மாதமாக, உலகமே கவலையாக பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு பிரச்னை, அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் தான்.
அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப், உள்­நாட்டு நலனை பாது­காக்க, உருக்கு மற்­றும் அலு­மி­னி­யம் இறக்­கு­ம­திக்கு, முறையே, 25 மற்­றும், 10 சத­வீ­தம் வரி விதித்து, வர்த்­தக போருக்கு வித்­திட்­டார். அடுத்து, சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 1,300 பொருட்­க­ளுக்கு, 25 சத­வீத சுங்க வரி விதித்­தார்.இதற்கு பதி­ல­டி­யாக சீனா, அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும், 128 பொருட்­க­ளுக்கு, 25 சத­வீ­தம் வரை வரி விதித்­தது.
இப்­படி துவங்­கிய வர்த்­தக போரில் என்ன நடக்­கும்; யாருக்கு நஷ்­டம்; எப்­படி முடி­வுக்கு வரும் என, பார்ப்­போம்.
கொதிப்பு
அமெ­ரிக்கா, சீனா­விற்கு ஏற்­று­மதி செய்­வதை விட, 370 பில்­லி­யன் டாலர் அதி­க­மாக, சீனா, அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­கிறது.இத­னால் அதி­க­ரித்­துள்ள வர்த்­தக பற்­றாக்­கு­றை­யால், அமெ­ரிக்­கா­வில் உற்­பத்தி மற்­றும் வேலை­வாய்ப்பு குறை­வ­தாக கூறி, சீனா­விற்கு எதி­ராக, டிரம்ப் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.
பதி­லுக்கு சீனா, அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யும் வாக­னம், விவ­சா­யம் உள்­ளிட்ட துறை­கள் சார்ந்த, 128 பொருட்­க­ளுக்கு, 25 சத­வீத சுங்க வரி விதித்­துள்­ளது.இத­னால், குறிப்­பாக அமெ­ரிக்­கா­வின், இல்­லி­னாய்ஸ், இண்­டி­யானா, கான்­சாஸ், மின்­ன­சோட்டா. வாஷிங்­டன் ஆகிய மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த விவ­சா­யி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.ஏனெ­னில், அவர்­கள் சீனா­வுக்கு அதிக அள­வில், சோயா பீன், ஆப்­பிள், செர்ரி உள்­ளிட்ட பழங்­கள், கொட்­டை­கள், பதப்­ப­டுத்­தப்­பட்ட ஜூஸ் வகை­கள் ஆகி­ய­வற்றை ஏற்­று­மதி செய்­கின்­ற­னர்.
அதிக வரி கார­ண­மாக, சீனா­விற்­கான ஏற்­று­மதி குறைந்­தால், உள்­நாட்­டில் பொருட்­களை விற்க நேரும்; இத­னால் விலை குறைந்து, தாங்­கள் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­ப­தால், அமெ­ரிக்க விவ­சா­யி­கள் கொதிப்­ப­டைந்து உள்­ள­னர்.
சீன அதி­பர், ஜீ ஜின்­பிங், சுங்க வரி உயர்­வால், உள்­நாட்­டில் விலை கூடிய பொருட்­க­ளுக்கு மானி­யம் வழங்கி, பாதிப்பை தவிர்க்­க­லாம். அது­போல, அமெ­ரிக்­கா­வின் வரி விதிப்­பால் பாதிக்­கப்­படும் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்­கும், மானிய உதவி செய்­ய­லாம்.கார­ணம், சீனா­வி­டம், 3 டிரில்­லி­யன் டாலர், அதா­வது, 195 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு அன்­னி­யச் செலா­வணி கையி­ருப்பு உள்­ளது.
கடந்த, 2008ல் ஏற்­பட்ட உலக நிதி நெருக்­க­டி­யின் போது, உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை துாண்டு­வ­தற்கு, தன் உபரி இருப்­பில் இருந்து, சீனா செலவு செய்­தது குறிப்­பி­டத்­தக்­கது.டிரம்­பிற்கு, அவ­ரது குடி­ய­ரசு கட்­சி­யி­லேயே எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. ‘இப்­ப­டியே போனால், அடுத்த தேர்­த­லில் ஜெயிப்­பது கடி­னம்; விவ­சா­யத்தை எரித்து புதைக்­கப் போகி­றார் டிரம்ப்...’ எனக் கூற ஆரம்­பித்­துள்­ள­னர்.
சோயா பீன் விவ­சா­யி­கள், ‘நாங்­கள் ஓட்­ட­ளித்த டிரம்பே எங்­க­ளுக்கு துரோ­கம் செய்­வார் என நினைக்­க­வில்லை’ என்­கின்­ற­னர்.அமெ­ரிக்கா போலன்றி, சீனா குறை­வான பொருட்­க­ளுக்கு சுங்க வரி விதித்­தா­லும், டிரம்­பிற்கு ஒரு, ‘டிரம்ப் கார்டு’ வைத்­துள்­ளது.அதா­வது, டிரம்ப் கட்சி வெற்றி பெற்ற இடங்­களில், அதி­கம் உற்­பத்­தி­யா­கும், சோயா பீன், கார், விமா­னம் ஆகிய துறை­கள் சார்ந்த பொருட்­க­ளாக பார்த்து, அதிக வரி விதித்­துள்­ளது. இது, நேர­டி­யாக டிரம்பை பாதிக்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
சீனா உள்­ளிட்ட நாடு­க­ளின் பொருட்­க­ளுக்கு சுங்க வரியை உயர்த்­தி­னால், இறக்­கு­மதி குறைந்து, அமெ­ரிக்­கா­வில் உற்­பத்தி கூடி­வி­டுமா என்­றால், இல்லை என்று தான் கூற வேண்­டும். கார­ணம், அங்கு உற்­பத்தி செலவு அதி­கம். அத­னால், அங்கு பண­வீக்­கம் தான் அதி­க­ரிக்­கும்.சீனா, வர்த்­த­கத்­தில் நியா­ய­மாக நடந்து கொள்­வ­தில்லை என்­ப­தில், உலக நாடு­க­ளி­டம் மாறு­பட்ட கருத்து கிடை­யாது.
அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து தொழில்­நுட்­பங்­களை சீனா வாங்­கிக் கொள்­ளும்; ஆனால், அமெ­ரிக்க கம்­பெ­னி­கள், சீனா­வில் தொழிற்­சா­லை­கள் துவக்க நினைத்­தால், அதற்கு முட்­டுக்­கட்டை போடும் என்­பது தெரிந்­ததே.
பாதிப்பில்லை
அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­யும் நாடு­களில், ஒன்­ப­தா­வது இடத்­தில் இந்­தியா இருக்­கிறது. அமெ­ரிக்­கா­விற்கு, 2 சத­வீ­தம் அளவே உருக்கு ஏற்­று­மதி செய்­வ­தால், எந்த வித­மான பெரிய பாதிப்­பும் இல்­லா­மல் இந்­தியா தப்­பித்­தது.
ஆனால், இந்­தியா ஏற்­று­மதி செய்­யும் ஜவுளி, விவ­சாய பொருட்­க­ளுக்கு குறி வைத்­தார் டிரம்ப். ‘ஏற்­று­மதி, இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு இந்­தியா கொடுக்­கும் மானி­யத்தை நிறுத்த வேண்­டும். மானி­யம் கார­ண­மாக, பொருட்­களை குறை­வான விலைக்கு விற்க முடி­கிறது’என, உலக வர்த்­தக கூட்­ட­மைப்­பிற்கு புகார் அனுப்­பி­யுள்­ளார்.
இந்த வர்த்­தக போரை, ஒரு வாய்ப்­பாக கருதி இந்­தியா செயல்­பட வேண்­டும். அமெ­ரிக்­கா­வில், சீனப் பொருட்­கள் வரத்து குறை­வால் ஏற்­படும் வெற்­றி­டத்தை, பல்­வேறு பொருட்­க­ளின் ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­ப­தன் மூலம், இந்­தியா பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.‘இந்த வர்த்­தக போரில் வெற்றி பெறு­வது எளிது’ என்­கி­றார் டிரம்ப். சீன அதி­பர் ஜீ ஜின்­பிங், ‘வர்த்­தக போரை விரும்­ப­வில்லை; ஆனால், வரு­வதை சமா­ளிக்க முடி­யும்’ என்று கூறி­யுள்­ளார்.
டிரம்­பின் எதிர்­பார்ப்பு என்­ன­வெ­னில், சீனா உட்­பட அனைத்து நாடு­களும், அமெ­ரிக்க பொருட்­களை அதி­கம் இறக்­கு­மதி செய்ய வேண்­டும் என்­பது தான்.சீனா­வி­டம் இருந்து சில சலு­கை­களை வாங்கி, அதை வெற்றி என்று கூறி, இந்த வர்த்­தக போரை டிரம்ப் முடித்து விடு­வார் என்று தான், வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர்.
இது போன்ற பல அதி­ரடிநட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்து, உலகை நடுங்க வைப்­பார் டிரம்ப். ஆனால், இறுதி வரை உறு­தி­யாக நிற்­கா­மல், பின்­வாங்கி விடு­வார். இது, பல சம­யங்­களில் நடந்­தி­ருக்­கிறது. அவர் துவக்­கிய வர்த்­தக போரும், அப்­ப­டித்­தான் ஆகும். பரஸ்­பர பேச்­சில், உடன்­பாடு ஏற்­படும். அதன் பின், ஜீ ஜின்­பிங் உடன் டிரம்ப் கைகோர்த்து, விருந்து சாப்­பிட்­டா­லும் சாப்­பி­டு­வார். உல­கம் பீதி­யில் ஆழ்ந்­தது தான் மிச்­சம் என்று இருக்­கும்.
பங்கு சந்­தை­கள் சரிவு
குறைந்த விலை­யில் அதி­கம் இறக்­கு­ம­தி­யா­கும் பொருட்­க­ளால், அவை சார்ந்த, அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளின் உற்­பத்தி குறைந்­துள்­ளது.அதே­ச­ம­யம், ‘அதிக வரி விதிப்­பால், பொருட்­கள் விலை உயர்ந்து, நுகர்­வோர் பாதிக்­கப்­ப­டு­வர்’ என, ‘வால்­மார்ட், அமே­சான்’ நிறு­வ­னங்­கள் எச்­ச­ரித்­துள்­ளன. அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­க­ளின் வீழ்ச்­சி­யும், பெரி­தாக இருக்­கிறது. இதன் தாக்­கம், இதர நாடு­க­ளி­லும் எதி­ரொ­லிக்­கிறது.
சேது­ரா­மன் சாத்­தப்­பன்
பொரு­ளா­தார நிபு­ணர்

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான ... மேலும்
business news
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது ... மேலும்
business news
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ ... மேலும்
business news
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)