பதிவு செய்த நாள்
16 ஏப்2018
00:19

வரி சேமிப்பிற்காக அதிகம் நாடப்படும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக திகழும், ‘ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும், இ.எல்.எஸ்.எஸ்., திட்ட முதலீட்டை மறு சுழற்சி அடிப்படையில் தொடர்வது குறித்து, முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களில் ஒன்றான, இ.எல்.எஸ்.எஸ்., வரி சேமிப்பு அளிப்பதோடு, மூன்று ஆண்டு, ‘லாக் இன்’ காலம் கொண்டுள்ளது. இந்த முதலீட்டிற்கு வருமான வரிச்சட்டம், 80சி பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.வரி சேமிப்பிற்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களில் சிலர், நான்காம் ஆண்டு அதே பணத்தை எடுத்து, மறு முதலீடு செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் அதே தொகைக்கு மீண்டும் வரி விலக்கு பெறலாம். ஒரு சிலர், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, இ.எல்.எஸ்.எஸ்., தொகையை மறுமுதலீடு செய்வதை ஒரு உத்தியாகவும் கடைபிடிக்கின்றனர்.ஆனால், இது சிறந்த உத்தி அல்ல என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
இது வரி சேமிப்பிற்கு உதவினாலும், முதலீடு வளர உதவாது என்கின்றனர்.வரி சேமிப்பிற்கான திட்டமிடல் என்பது தனியே அமையாமல், ஒட்டுமொத்த நிதி திட்டமிடலுக்கு ஏற்ப அமைய வேண்டும். மேலும், இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு என்பதும் நிதி இலக்குகளுக்கு ஏற்பவே அமைய வேண்டும்.
முதலீடு வளர வழி செய்யாவிடில், நீண்ட கால நோக்கில் வளத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படும். வரி சேமிப்புக்கான முதலீடு செய்ய போதிய பணம் இல்லாத சூழல் போன்ற, விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே மறுமுதலீடு உத்தியை பின்பற்றுவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|