பதிவு செய்த நாள்
16 ஏப்2018
00:20

பொது காப்பீடு நிறுவனங்களின் நேரடி பிரீமியம், 2017- – 18ம் நிதியாண்டில், 17 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது என, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணைய புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.பொது காப்பீடு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம், 1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வாகனம் மற்றும் மருத்துவக் காப்பீடுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, ஆயுள் அல்லாத காப்பீடு பிரிவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். அரசின் தேசிய மருத்துவக் காப்பீடு திட்டம் இதை மேலும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பொது காப்பீடு நிறுவனங்களில், ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ நிறுவனம், 15.07 சதவீத பங்கை பெற்றுள்ளது. நான்கு பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் கூட்டாக, 45 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|