பதிவு செய்த நாள்
16 ஏப்2018
00:25

நிதி இலக்குகளுக்கு ஏற்ப, முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதோடு, அவற்றை மாற்றி அமைப்பது அவசியமா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பல்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. அவை தரும் பலன்களும் மாறுபடுகின்றன. நிதி திட்டமிடலில் ஈடுபடும் போது, முதலீட்டு வாய்ப்புகளின் தன்மைக்கேற்ப அவற்றை தேர்வு செய்து, உரிய விகிதத்தில் முதலீடு செய்வது அவசியம்.
இந்த தேர்வு, நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைய வேண்டும். ஆனால், முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. தொடர்ந்து, அவற்றை கண்காணித்து வருவதும் அவசியம்.வைப்பு நிதிகளில் துவங்கி, சம பங்கு முதலீடு அல்லது ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்கள் வரை, பலவிதமான நிதி வாய்ப்புகளில் முதலீடு செய்திருக்கலாம். இவற்றை முறையாக பராமரித்து வர வேண்டும்.
அதாவது முதலீட்டு வாய்ப்புகள் அளிக்கும் பலன்களை கண்காணித்து, அவற்றை மாற்றி அமைக்க வேண்டுமா என, அவ்வப்போது பரிசீலிக்க வேண்டும். சரியான உத்தி தேவைஎப்படி முதலீடு செய்வதற்கு ஒரு திட்டம் தேவையோ... அதே போலவே, முதலீட்டு வாய்ப்புகளை மாற்றி அமைக்க முயற்சிப்பதற்கும் சரியான திட்டம் தேவை. இதில், இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
முதல் அம்சம், எப்போது மாற்றம் தேவை என தீர்மானிப்பது. இரண்டாவது அம்சம், மாற்றத்தை எப்படி மேற்கொள்வது என முடிவு செய்வது. இதற்காக முதலீட்டு வாய்ப்புகளை தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்க வேண்டும்.மாற்றம் தேவை என்பதற்காக, அடிக்கடி மாற்றி அமைப்பது அல்லது மாற்றம் தேவையா என பரிசீலிப்பதோ சரியாக இருக்காது. எனவே, நிதி திட்டமிடலில் ஈடுபடும் போதே, ஆய்வுக்கான கால அளவையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
அதற்கேற்ப, காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என, முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும். எனினும், இது ஓராண்டிற்கு மேல் இல்லாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில், குறுகிய காலத்தில் அடிக்கடி மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
இது தவிர, நிதி சாதனங்களின் தன்மைக்கேற்பவும் ஆய்வுக்கான கால அளவை தீர்மானிக்கலாம். அதாவது, நிதி சாதனம் அளிக்கும் பலனில் குறிப்பிட்ட அளவிற்கு மேலான மாற்றம் நிகழும் போது, ஆய்வு செய்வது என வைத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, பங்குகளில் முதலீடு செய்திருந்தால், அவை அளிக்கும் பலனில் ஏற்படும் மாற்றத்தில் குறிப்பிட்ட சதவீத மாற்றம் ஏற்படும் போது மாற்றம் தேவையா என பரிசீலிக்கலாம்.
மாற்று வழி
இந்த அளவு, நிதி சாதனத்தின் தன்மைக்கேற்ப அமைய வேண்டும். பங்குகளை விட வைப்பு நிதியின் பலனை அதற்கேற்ற விகிதத்தில் அணுக வேண்டும். இந்த இரண்டு உத்திகளையும் ஒன்றாக கலந்தும் பயன்படுத்தலாம். மாற்றம் தேவையா? எனும் கேள்விக்கு பதில் கிடைத்த பின், எப்படி மாற்றி அமைப்பது என தீர்மானிக்க வேண்டும்.
இதற்கு எளிய வழி, மாற்றம் தேவை என உணரும் முதலீட்டை விற்றுவிட்டு, அதன் பலனை வேறு பொருத்தமான வழியில் முதலீடு செய்யலாம். எனினும், வரி விதிப்பின் தாக்கத்தை மனதில் கொள்ள வேண்டும்.
இதே போல, முதலீட்டு மூலம் கிடைக்கும் வட்டி வருமானம், முதிர்ச்சி தொகை போன்ற பலன்களை, முதலீட்டு பங்கு குறைவாக உள்ள வாய்ப்பில் முதலீடு செய்து வலுவாக்கலாம். இந்த உத்திகளை நிறைவேற்ற,முதலில் முதலீடுகளை பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும். பின்னர் அவற்றை வகைப்படுத்தி, பலன்களை ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|