மொத்த விலை பணவீக்கம் வீழ்ச்சிமொத்த விலை பணவீக்கம் வீழ்ச்சி ... பயணியர் வாகன ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்கு பின் சரிவு பயணியர் வாகன ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்கு பின் சரிவு ...
பேப்பர் கப், பாக்கு மட்டைகளுக்கு மாற்றாக கரும்பு, சோள சக்கையால் ஆன பொருட்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
06:22

பிளாஸ்­டிக் பொருட்­க­ளுக்கு மாற்­றாக, சோளம், கரும்­புச் சக்­கை­யால் ஆன உணவு பொருட்­க­ளுக்­கான பேக்­கிங் வகை­கள், விற்­ப­னைக்கு வந்­துள்­ளன.

தமி­ழ­கத்­தில், பிளாஸ்­டிக் பயன்­பாட்டை குறைக்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிளாஸ்­டிக் பை தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், 40 மைக்­ரா­னுக்கு குறை­வாக, பிளாஸ்­டிக் தயா­ரித்­தால், அவற்றின் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

பிளாஸ்­டிக்­குக்கு மாற்­றாக வந்த பேப்­பர் கப் மற்­றும் பாக்கு மட்­டை­யால் தயா­ரான தட்டு உள்­ளிட்­ட­வற்­றை­த் தொ­டர்ந்து, கரும்பு மற்­றும் சோளச் சக்­கை­யால் ஆன தட்டு, கிண்­ணம், டம்­ளர் உள்­ளிட்­டவை, விற்­ப­னைக்கு வந்­துள்­ளன.
இது குறித்து, உணவு பேக்­கிங் பொருட்­கள் விற்­ப­னை­யா­ள­ரும், வட­சென்னை வியா­பா­ரி­கள் சங்க செய­ல­ரு­மான, அப்­துல் அஜீஸ் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில் ராஜஸ்­தான், குஜ­ராத்­தி­லி­ருந்­தும், சீனா­வி­லி­ருந்­தும் மக்­காச் சோளம் மற்­றும் கரும்பு சக்­கை­யால் ஆன தட்டு உள்­ளிட்ட உணவு பேக்­கிங் பொருட்­கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளன. பிளாஸ்­டிக் பொருட்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது, இவற்­றின் விலை, 40 த­வீ­தம் அதி­கம் தான். ஆனால், எளி­தில் மக்­கும் என்­ப­தால், இதற்கு வர­வேற்பு மெல்ல உயர்ந்து வரு­கிறது.இதற்கு முன் வந்த பேப்­பர் கப் மற்­றும் பாக்கு மட்­டை­யால் ஆன தட்டு உள்­ளிட்­ட­வற்­றில், பூஞ்சை பிடிப்­பது போன்ற பிரச்­னை­கள் இருந்­தன.
தற்­போது, சோளம் மற்­றும் கரும்­புச் சக்­கை­யால் ஆனவை, 3 ரூபாய் முதல் அதி­க­பட்­சம், 20 ரூபாய் வரை ஆகிறது. பத்­தில், மூன்­று­ பேர் இந்த மாதி­ரி­யான தயா­ரிப்­புக்கு வர­வேற்பு தெரி­விக்­கின்­ற­னர். துவக்கத்தில், பிளாஸ்­டிக் பேப்­பர் அல்­லது வாழை இலைக்­காக, 10 பைசா தான் செல­வா­னது. அதன்­பின், 1.50 ரூபா­யாக உயர்ந்து, தற்­போது, 6.50 ரூபாய் வரை செல­வா­கிறது. தற்­போது, மண்­ணுக்­கும்,
எதிர்­கால சந்­த­திக்­கும் ஊறு விளை­விக்­காத கரும்­புச் சக்கை போன்ற பொருட்­க­ளின், ‘பேக்­கிங்’ வகை­க­ளின் விலை, 30 சத­வீ­தம் கூடு­தல் ஆனா­லும், நன்­மையே!அதே போல் தேநீ­ருக்கு பேப்­பர் கப் வந்­தது போல், உண­வுப் பொருட்­கள் மற்­றும் ஐஸ்­கி­ரீம் போன்­ற­வற்­றை­ பேக்­கிங் செய்ய பேப்­பர் டின்­கள் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. விரை­வில் உணவு பேக்­கிங் பிரி­வில் பிளாஸ்­டிக் முற்­றி­லும் ஒழிக்­கப்­பட்டு விடும் என கரு­து­கி­றோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)