பதிவு செய்த நாள்
19 ஏப்2018
00:39
புதுடில்லி : கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், மாருதி சுசூகி நிறுவனம், உள்நாட்டு சந்தையில், ‘யுவி’ எனும் யுட்டிலிட்டி வெகிக்கிள்ஸ் பிரிவில், 27.53 சதவீதத்தை கைப்பற்றி, முதலிடத்தை பெற்றுள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்.கிராஸ் ஆகிய யுவி கார்களின் விற்பனை, கடந்த நிதியாண்டில், 2.53 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 1.95 லட்சம் கார்கள் அதிகம் விற்பனை ஆகி, 29.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை பிரிவின் மூத்த செயல் இயக்குனர், ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது: அண்மை ஆண்டுகளாக, யுவி பிரிவில் தொடர்ந்து புதிய கார்களை அறிமுகம் செய்து வந்தோம். விட்டாரா பிரெஸ்ஸா விற்பனை கடந்த நிதியாண்டில், 36.7 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ் கிராஸ், 44.4 சதவீதமும் எர்டிகா, 4.1 சதவீதமும் அதிகரித்துள்ளது. மார்ச், 31 நிலவரப்படி நிறுவனத்துக்கு, 2,627 ஷோரூம்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|