முதலிடத்தில் மாருதிமுதலிடத்தில் மாருதி ... ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு; மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல் ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு; மத்திய அமைச்சர் சுரேஷ் ... ...
மின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறை; முதலீடுகளை திரட்டுவதில் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
00:40

புது­டில்லி : மின்­னணு ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யைச் சேர்ந்த, 12 நிறு­வ­னங்­கள், மூன்று மாதங்­களில், ‘வெஞ்­சர் கேப்­பி­டல்’ எனப்­படும் துணி­கர முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் இருந்து, 250 கோடி டாலர் முத­லீ­டு­களை திரட்டி, சாதனை படைத்­துள்­ளன.

வலை­த­ளங்­களில் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் என, அழைக்­கப்­ப­டு­கின்­றன. இவற்­றின் வர்த்­த­கம், மின்­னணு தொழில்­நுட்­பத்­தின் அடிப்­ப­டை­யில் நடை­பெ­று­கிறது. இதற்கு, ரத்த அழுத்­தம், நீரி­ழிவு, உடல் எடை, உடற்­ப­யிற்­சி­யில் ஏற்­படும் மாற்­றம் போன்ற தக­வல்­களை காட்­டும், கைய­ணி­க­லன்­களை எடுத்­துக் காட்­டாக கூற­லாம்.

இந்த வகை­யில், மின்­னணு ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யைச் சேர்ந்த, 12 நிறு­வ­னங்­கள், இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை, 250 கோடி டாலர் துணி­கர முத­லீ­டு­களை திரட்டி சாதனை புரிந்­து உள்­ளன. கடந்த ஆண்டு, இதே காலத்­தில், இத்­து­றை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் திரட்­டிய முத­லீடு, 160 கோடி டால­ராக இருந்­தது. இதற்கு முன், 2017ல், ஏப்., – ஜூன் காலாண்­டில், அதி­க­பட்­ச­மாக, 240 கோடி டாலர் திரட்­டப்­பட்­டதே, சாத­னை­யாக இருந்­தது. இது, நடப்­பாண்­டின் முதல் காலாண்­டில், முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மதிப்­பீட்டு காலாண்­டில், ‘ஹார்ட்ப்ளோ’ நிறு­வ­னம், அதி­க­பட்­ச­மாக, 24 கோடி டாலர் முத­லீட்டை திரட்­டி­யுள்­ளது.இதை­ய­டுத்து, ‘ஹெலிக்ஸ், சோமா லாஜிக்’ ஆகிய நிறு­வ­னங்­கள், தலா, 20 கோடி டாலர் திரட்­டிக் கொண்­டன. ‘பாயின்ட் கிளிக் கேர்’ நிறு­வ­னம், 14.60 கோடி டாலர் முத­லீட்டை ஈர்த்­துள்­ளது. ‘கலெக்­டிவ் ஹெல்த்’ நிறு­வ­னம், 11 கோடி டாலர் திரட்­டி­ உள்­ளது. இந்­தாண்­டின் முதல் காலாண்­டில், மின்­னணு ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை நிறு­வ­னங்­கள், அனைத்து வகை கடன்­கள் மூலம், 300 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)