மின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறை; முதலீடுகளை திரட்டுவதில் சாதனைமின்னணு ஆரோக்கிய பராமரிப்பு துறை; முதலீடுகளை திரட்டுவதில் சாதனை ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 ...
ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு; மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
00:41

புதுடில்லி : ‘‘ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜி.எஸ்.டி., ரீபண்டு பிரச்­னைக்கு, நிதி­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வு காணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்­ளார்.

இந்­தியா, 2017, ஜூலை 1ல், புதிய வரி விதிப்­பான, ஜி.எஸ்.டி., நடை­மு­றைக்கு மாறி­யது. அது முதல், இந்­தாண்டு மார்ச் வரை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யில், 17 ஆயி­ரத்து, 616 கோடி ரூபாய் திரும்ப அளிக்க, மத்­திய அரசு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதில், ஐ.ஜி.எஸ்.டி.,யில், 9,604 கோடி ரூபாய்; உள்­ளீட்டு வரி­யில், 5,510 கோடி ரூபாய் ஆகி­யவை அடங்­கும். இது தவிர, மாநில அர­சு­க­ளின் வரிக் கழி­வு­கள் ஆகி­ய­வற்­றின் கீழ், 34 ஆயி­ரம் கோடி ரூபாய், ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், கணக்கு தாக்­க­லின்­போது நேரும் தவ­று­கள், நடை­முறை சிக்­கல்­க­ளால் ஏற்­படும் தாம­தம் போன்­ற­வற்­றால், 40 சத­வீத அள­விற்கே ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இத­னால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க முடி­யா­மல் திணறி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், டில்­லி­யில் இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் நிகழ்ச்­சி­யில், மத்­திய அமைச்­சர் சுரேஷ் பிரபு பேசி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., ரீபண்ட், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு மிக முக்­கிய பிரச்­னை­யாக உள்­ளது. அவர்­க­ளி­டம், திரும்­பப் பெற வேண்­டிய வரித் தொகை விப­ரங்­களை கேட்­டுள்­ளேன்.இப்­பி­ரச்­னையை நிதி­ய­மைச்­ச­ரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று, விரை­வில் தீர்வு காண்­பேன்.

நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மத்­திய அரசு எடுத்து வரு­கிறது. அத்­து­டன், அனைத்து துறை­க­ளி­லும், எந்­தெந்த வகை­யில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­க­லாம் என்­பதை அறிக்­கை­யாக வழங்­கு­மா­றும், ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளேன். அந்த பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில், மாநில அர­சு­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, வலி­மை­யான திட்­டம் தயா­ரிக்­கப்­படும்.

இது தொடர்­பாக, விரை­வில் அமைச்­ச­ரவை உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டத்­தைக் கூட்ட திட்­ட­மிட்­டுள்­ளேன். கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்டை விட, 2017 – 18ம் நிதி­யாண்­டில், நாட்­டின் ஏற்­று­மதி, 9.78 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 30 ஆயி­ரத்து, 284 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு அவர் பேசி­னார்.

வர்த்தகம் பாதிப்பு :
ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., செலுத்­திய வகை­யில், திரும்ப வர வேண்­டிய ரீபண்ட், ஐந்து மாதங்­க­ளுக்கு மேலாக வரா­மல் உள்­ளது. இத­னால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கடும் நிதி நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நடை­முறை மூல­தன பற்­றாக்­குறை கார­ண­மாக, அவர்­க­ளின் வர்த்­த­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய அரசு, ரீபண்ட் வழங்­கும் நடை­மு­றையை முழு­வ­து­மாக, ‘ஆன்­லைன்’ முறைக்கு மாற்ற வேண்­டும். ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, 60 சத­வீ­தத்­திற்கு மேல், ரீபண்ட் நிலு­வை­யில் உள்­ளது. அதை உட­ன­டி­யாக வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.
-இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)