பதிவு செய்த நாள்
20 ஏப்2018
01:38

புதுடில்லி : ‘‘பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க இன்னும் காலம் கனியவில்லை,’’ என, ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ தலைவர், ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது: பொதுத் துறை வங்கிகளில் மட்டுமின்றி, தனியார் வங்கிகளிலும் தவறுகள் நடக்கின்றன. அதனால், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதால், தவறே நடைபெறாது எனக் கூற முடியாது. இரு துறைகளிலும், நல்லவை, கெட்டவை கலந்து இருக்கின்றன.
பொதுத் துறை வங்கிகளை மிகக் பெரிய அளவில் தனியார்மயமாக்கும் அளவிற்கு, இந்தியாவில் சமூக பொருளாதார சூழல் இல்லை. தற்போதைய வளர்ச்சிப்படி, அத்தகைய நிலை ஏற்பட, இன்னும், 50 ஆண்டுகள் ஆகும். வர்த்தக நோக்கில் செயல்படும் தனியார் வங்கிகளை போல, பொதுத் துறை வங்கிகளை கருத முடியாது. அவற்றுக்கு, சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த, 11 ஆண்டுகளில், மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளில், 2.60 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அதற்கேற்ப வங்கிகளின் வளர்ச்சி இல்லை என்பதால், அவற்றை தனியார் மயமாக்க வேண்டும் என, சில தொழில் கூட்டமைப்புகள் கோருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|