பதிவு செய்த நாள்
20 ஏப்2018
01:43

மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவர், எம்.கே.சர்மாவை, அவ்வங்கியில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.
இதில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக இயக்குனராக, சந்தா கோச்சாரை அடுத்து, யாரை நியமிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், சந்தா கோச்சார் மீது, முழு நம்பிக்கை உள்ளதாக, வங்கியின் இயக்குனர் குழுமம், கடந்த மாதம் தெரிவித்துஇருந்தது.
அதன் பின், இயக்குனர் குழுவில் பிளவு ஏற்பட்டு, சந்தா கோச்சார் பதவி பறிபோக உள்ளதாக கூறப்பட்டது. அதற்கேற்ப, இயக்குனர் குழுவில், மத்திய அரசு பிரதிநிதி, அமித் அகர்வாலுக்கு பதிலாக, நிதிச் சேவைகள் துறையின் இணை இயக்குனர், லோக் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். அதனால், சந்தா கோச்சாரின் நாட்கள் எண்ணப்படுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு வலு சேர்க்கும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவர், எம்.கே.சர்மாவை, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.அதில், சந்தா கோச்சார் பதவி விலகினால், அடுத்து யாரை நியமிக்கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
இவ்வங்கியின், 72 சதவீத பங்கு மூலதனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. வீடியோகான் விவகாரம் காரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பங்கு விலை, பெருமளவு சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|