பதிவு செய்த நாள்
20 ஏப்2018
01:45
புதுடில்லி : இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2017ல், 2.60 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. இதையடுத்து, உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், பிரான்சை விஞ்சி, 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளதாக, சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகின், ஆறாவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற சிறப்பை, இந்தியா பெற்றுள்ளது. இது, நாட்டின் வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இதனால், முதலீடுகள் அதிகரிக்கும். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பாதிப்புகளில் இருந்து, நாடு மீண்டு விட்டதாக, சர்வதேச நிதியமும், உலக வங்கியும் தெரிவித்துள்ளன.
நாட்டின் பொருளாதாரம், இந்தாண்டு, 7.4 சதவீதம்; 2019ல், 7.8 சதவீதமாக வளர்ச்சி காணும் என, சர்வதேச நிதியம் கூறியுள்ளது. இதே காலத்தில், இந்திய பொருளாதாரம், முறையே, 7.3 மற்றும், 7.5 சதவீதமாக உயரும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 3 லட்சம் கோடி டாலரை தாண்டும். இதன் மூலம், மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ், பிரிட்டனை விஞ்சி, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|