பதிவு செய்த நாள்
20 ஏப்2018
11:16

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஏப்.,20) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள கடும் சரிவின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 79.95 புள்ளிகள் சரிந்து 34,347.34 புள்ளிகளாகவும், நிப்டி 25.20 புள்ளிகள் சரிந்து 10,540.10 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகத்துறை, வங்கிகள், மின்துறை, பொதுத்துறை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
டாடா ஸ்டீல், ஏசியன் பெண்ட்ஸ், ஐடிசி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.39 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|