சிறிய நிறுவனங்களுக்கு விதியை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கைசிறிய நிறுவனங்களுக்கு விதியை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை ... விரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் விரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ...
புதிய சாதனை புரிய தயாராகும் டி.சி.எஸ்.,; சந்தை மூலதனம் ரூ.6.60 லட்சம் கோடியை நெருங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
00:39

புதுடில்லி : டி.சி.எஸ்., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், டாடா கன்­சல்­டன்சி நிறு­வ­னத்­தின் சந்தை மூல­த­னம், 6.60 லட்­சம் கோடி ரூபாயை நெருங்­கி­யுள்­ளது. இதை தாண்­டும்­பட்­சத்­தில், இந்­தி­யா­வில் இத்­த­கைய சாதனை புரிந்த முதல் நிறு­வ­னம் என்ற சிறப்பை, டி.சி.எஸ்., பெறும்.

டி.சி.எஸ்., கடந்த, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜன­வரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்டு நிதி­நிலை அறிக்­கையை, நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது. அதில், டி.சி.எஸ்., நிகர லாபம், முந்­தைய காலாண்டை விட, 5.71 சத­வீ­தம் உயர்ந்து, 6,904 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இது, சந்தை எதிர்­பார்ப்பை விட, அதி­க­மாக இருந்­தது. அத்­து­டன், நிறு­வ­னத்­தின் பொன் விழாவை முன்­னிட்டு, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஒரு பங்­கிற்கு, ஒரு பங்கு வீதம் போனஸ் வழங்­கு­வ­தாக டி.சி.எஸ்., அறி­வித்­தது. இது தவிர, ஒரு பங்­கிற்கு, 29 ரூபாய் டிவி­டெண்டு அளிக்­கப்­படும் என, தெரி­வித்­தது.

இது­போன்ற கார­ணங்­க­ளால், நேற்று, டி.சி.எஸ்., பங்­கு­க­ளுக்கு அதிக கிராக்கி காணப்­பட்­டது. மும்பை பங்­குச் சந்­தை­யில், டி.சி.எஸ்., பங்கு விலை, ஓராண்­டில் இல்­லாத வகை­யில், 6.76 சத­வீ­தம் உயர்ந்து, 3,406.40 ரூபாய் என்ற அள­வில் நிலை பெற்­றது. தேசிய பங்­குச் சந்­தை­யி­லும், பங்கு விலை, 6.62 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3,402.45 ரூபா­யில் நிலை கொண்­டது.இதன் மூலம், டி.சி.எஸ்., பங்­கின், சந்தை மூல­த­னம், நேற்று ஒரே நாளில், 41,301 கோடி ரூபாய் அதி­க­ரித்து, 6,52,083 கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டது. டி.சி.எஸ்., சந்தை மூல­த­னம், முதன் முறை­யாக, கடந்த, ஜன., 24ல், 6 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யது.

இதை­ய­டுத்து, குறு­கிய காலத்­தில், தற்­போது, 6.50 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது. டி.சி.எஸ்., பங்கு ஒன்­றின் விலை, 3,448 ரூபாயை எட்­டும் பட்­சத்­தில், இந்­தி­யா­வில், 10 ஆயி­ரம் கோடி டாலர் சந்தை மூல­த­னத்தை எட்­டிய, முதல் நிறு­வ­னம் என்ற சிறப்பை பெறும். அப்­போது, ஒரு டாலர், 66 ரூபாய் என்ற அடிப்­ப­டை­யில், இதன், சந்தை மூல­த­னம், 6.60 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும். டி.சி.எஸ்., வரும் வாரத்­தில், இந்த சாதனை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

என்ன காரணம்?
இந்­தி­யா­வில், ‘ஆட்­டோ­மே­ஷன், ஏ.ஐ.,’ போன்ற புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் பயன்­பாடு பர­வ­லாகி வரு­கிறது. இவை, பாரம்­ப­ரிய சாப்ட்­வேர் சேவை நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்­சிக்கு சவா­லாக உள்­ளன. அமெ­ரிக்­கா­வின் விசா கட்­டுப்­பா­டும், இந்­நி­று­வ­னங்­களை பாதித்­துள்­ளது. ஆனால், சாப்ட்­வேர் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, டி.சி.எஸ்., மட்­டும், சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­வ­தற்கு, அதன் வர்த்­தக உத்தி தான் கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது. இதர ஐ.டி., நிறு­வ­னங்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, சாப்ட்­வேர் சேவை­யு­டன், ஏ.ஐ., போன்ற நவீன தொழில்­நுட்­பங்­களை இணைத்து வழங்­கு­கின்­றன. ஆனால், டி.சி.எஸ்., முதன் முத­லாக, அதே தொழில்­நுட்­பத்­தில், ‘இக்­னியோ’ என்ற சாப்ட்­வேரை உரு­வாக்கி, தனியே விற்­பனை செய்­கிறது. இது போல, எதிர்­கால தொழில்­நுட்­பம் சார்ந்த வர்த்­தக உத்­தி­களை முத­லில் பயன்­ப­டுத்தி, நம்­பர் – 1, ஐ.டி., நிறு­வ­ன­மாக, டி.சி.எஸ்., திகழ்­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)