பதிவு செய்த நாள்
25 ஏப்2018
00:47

பாரிமுனை பழச் சந்தையில், எகிப்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் ஆரஞ்சு, சேலம் மாம்பழம் ஆகியவற்றின் விற்பனை களைகட்டிஉள்ளது.
சென்னை, பாரிமுனை பழச் சந்தையில், மாம்பழம், திராட்சை, பலாப்பழம், தர்பூசணி, கிர்ணி பழம், டிராகன் புரூட், அத்திப்பழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகரித்துள்ளது.
இது குறித்து, பந்தர் தெரு வியாபாரிகள் பொது நலச் சங்க தலைவர், எஸ்.திருமாறன் கூறியதாவது: சேலம், மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாம்பழம் வரத்து துவங்கியுள்ளது. தற்போது பங்கனப்பள்ளி, செந்துாரம், ஹிமாம்பசந்த், அல்போன்சா உள்ளிட்ட வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சில்லரை விலையில் பங்கனப்பள்ளி, 1 கிலோ, 100 ரூபாயாக உள்ளது. செந்துாரம், 1 கிலோ, 60 ரூபாயாகவும், ஹிமாம்பசந்த், 1 கிலோ 130 - 140 ரூபாயாகவும், அல்போன்சா, 1 கிலோ, 120 - 130 ரூபாயாகவும் உள்ளன. எகிப்து, ஆஸ்திரேலியாவில் இருந்து, ஆரஞ்சு பழங்கள் இறக்குமதியாகியுள்ளன. இவை, 1 கிலோ, 100 - 120 ரூபாயாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பழ வகைகளின் விலை:
பழம் அளவு விலைவாஷிங்டன் ஆப்பிள் 1 கிலோ ரூ.150 - 120மாதுளை 1 கிலோ ரூ.100 - 120கமலா 1 கிலோ ரூ.80 - 100திராட்சை 1 கிலோ ரூ.100 - 120சப்போட்டா 1 கிலோ ரூ.30 - 60கிர்ணி 1 கிலோ ரூ.15 - 18கொய்யா 1 கிலோ ரூ.60 - 80தர்பூசணி 1 கிலோ ரூ.12 - 15ஸ்ட்ராபெர்ரி ஒரு பெட்டி ரூ.50 - 80அத்திப்பழம் ஒரு பெட்டி ரூ.40 - 60பட்டர்புரூட் 1 கிலோ ரூ.200 - 250சாத்துக்குடி 1 கிலோ ரூ.50 - 80கிவி ஒரு பெட்டி ரூ.50 - 80டிராகன் பழம் ஒன்று ரூ.30வாழை ஒரு தார் ரூ.350பலாப்பழம் 1 கிலோ ரூ.40 - 50
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|