பதிவு செய்த நாள்
25 ஏப்2018
00:51

புதுடில்லி : வலைதள சந்தை நிறுவனங்கள், பொருட்களை தள்ளுபடி விலையில் அளிப்பதால், தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக, நேரடி விற்பனை நிறுவனங்கள் புலம்புகின்றன.
இது குறித்து, இந்நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஐ.டி.எஸ்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: நேரடி விற்பனை நிறுவனங்களின் பொருட்கள், வலைதளங்களிலும் விற்கப்படுகின்றன. இவற்றை, ‘பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட வலைதள சந்தை நிறுவனங்கள், நேரடி விற்பனை நிறுவனங்களின் அனுமதியின்றி, அதிக தள்ளுபடியில் அளிக்கின்றன.
இதன் காரணமாக, நேரடி விற்பனை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களை நம்பி, 52 லட்சம் நேரடி விற்பனையாளர்கள் உள்ளனர். எனவே, நேரடி விற்பனை துறையில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தை கருதி, இப்பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
ஒரு சில போலி நிறுவனங்கள், நேரடி விற்பனை நிறுவனங்கள் என்ற பெயரில் பொருட்களை விற்பனை செய்கின்றன. இதுவும், இத்துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|