பதிவு செய்த நாள்
25 ஏப்2018
00:54

கோல்கட்டா : முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம், பிப்ரவரியில் புதிதாக, 87 லட்சம் சந்தாதாரர்களை இணைத்துள்ளது.
இது குறித்து, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, ‘டிராய்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பிப்ரவரியில், 87 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்து, முதலிடத்தில் உள்ளது.
இதற்கடுத்த இடங்களில், ‘ஐடியா செல்லுலார், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா’ ஆகியவை உள்ளன. இந்நிறுவனங்கள் முறையே, 41 லட்சம், 44 லட்சம் மற்றும், 32 லட்சம் சந்தாதாரர்களை, புதிதாகச் சேர்த்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 15.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 14.62 சதவீதமாக இருந்தது. மேலும், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பும் உயர்ந்துள்ளன.
இருந்த போதிலும், அதிக சந்தாதாரர்களை வைத்துள்ள பெரிய நிறுவனமாக, பார்தி ஏர்டெல் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 29.6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இதற்கடுத்து, வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை உள்ளன. இந்நிறுவனங்களுக்கு முறையே, 21.7 கோடி, 20.2 கோடி மற்றும், 17.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|