பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:14

மும்பை : சொத்து நிர்வாக சேவையில் ஈடுபட்டுள்ள, ‘ஆனந்த்ரதி பிரைவேட் வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராகேஷ் ராவல் கூறியதாவது:நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரி, அடுத்த மாதம், ‘செபி’க்கு விண்ணப்பிக்க உள்ளோம். அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். இவ்வெளியீட்டில், 85 சதவீத பங்குகள், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். சில்லரை முதலீட்டாளர்கள், எஞ்சிய, 15 சதவீத பங்குகள் கோரி விண்ணப்பிக்கலாம்.
இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனமும், சட்ட ஆலோசனைக்கு, ஏ.இசட்.பி., பார்ட்னர்ஸ் நிறுவனமும், தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிறுவனம், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘ஆனந்த்ரதி பைனான்சியல் சர்வீசஸ்’ நிறுவனம், 2017, பிப்ரவரியில், ‘ரெலிகேர் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தி, ஆனந்த்ரதி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|