பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:15

கோவை : ‘இந்தாண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான பருத்தி விலை நிலவரத்தை, பருவ மழை தீர்மானிக்கும்’ என, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய பருத்தி கூட்டமைப்பு தலைவர் துளசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டமைப்பு சார்பில், 2017 அக்., முதல், 2018 செப்டம்பர் வரையிலான இந்திய பருத்தி நிலவரம், ஆய்வு செய்யப்பட்டது. 40 லட்சம் பேல் பருத்தி இருப்பு உள்ளது. உள்நாட்டு உற்பத்தி, 3.75 கோடி பேல் இருக்கும் என்றும், 18 லட்சம் பேல் இறக்குமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம், 4.33 கோடி பேல், பருத்தி வரத்து இருக்கும்.
இதில், 3.20 கோடி பேல் பருத்தி, நம் மில்களில் உபயோகப்படுத்தப்படும் என்றும், 69 லட்சம் பேல் ஏற்றுமதியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம், 44 லட்சம் பேல் இருப்பு இருக்கும். தேவையான அளவு தரமான பருத்தி கிடைத்ததால், அதன் விலை நிலையானதாக இருந்தது. இந்தாண்டு ஜூன் முதல் அக்., வரையிலான பருத்தி விலை நிலவரத்தை, பருவமழை தீர்மானிக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|