பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:17

புதுடில்லி : சிறிய நகரங்களில், எம்.எப்., எனப்படும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் பழக்கம், குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது.
இதற்கு, மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்து, ‘செபி’ உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நிறுவனங்களின் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் தான் காரணம்.மக்கள், தங்க நகைகள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் இருந்து, நிதி துறை முதலீடுகளுக்கு மாறி வருவதும், எம்.எப்., துறை வளர்ச்சிக்கு உந்துதலாக உள்ளது.
கடந்த 2017 – -18ம் நிதியாண்டில், ‘பி 15’ எனப்படும், 15 சிறிய நகரங்களில், மியூச்சுவல் பண்டு முதலீடு, 1.20 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து, 4.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2016 -– 17ம் நிதியாண்டில் திரட்டியதை விட, 38 சதவீதம் அதிகம். இதே காலத்தில், மியூச்சுவல் பண்டு துறையில் உள்ள, 42 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து, 26 சதவீதம் உயர்ந்து, 23.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மொத்த சொத்து மதிப்பில், 19 சதவீத பங்களிப்பை, ‘பி 15’ எனப்படும் சிறிய நகரங்கள் வழங்கியுள்ளன. பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், இந்நகரங்களின் பங்கு, 62 சதவீதமாக உள்ளது.அதேசமயம், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட, ‘டி 15’ எனப்படும், 15 முன்னணி நகரங்களின் பங்கு, 36 சதவீத அளவிற்கே உள்ளது.
மியூச்சுவல் பண்டு துறையில், 40.7 சதவீத சொத்துகள், நேரடி முதலீடுகள் வாயிலாக வருகின்றன. இவற்றில், பங்கு சாராத திட்டங்கள் பெரும்பான்மையாக உள்ளன. அவற்றில், நிதி நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|