பதிவு செய்த நாள்
26 ஏப்2018
10:29

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளின் உயர்வு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு, உயர்வுடன் துவங்கி உள்ளது. ஏப்ரல் மாதத்தின் இறதி வாரம் என்பதால், பல ஒப்பந்தங்கள் காலாவதி ஆவதுடன், ஒப்பந்தங்கள் பல புதுப்பிக்கப்படும் என்பதால் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்.,26, காலை 9.15 மணி நிலவரம்)சென்செக்ஸ் 57.35 புள்ளிகள் உயர்ந்து 34,558.62 புள்ளிகளாகவும், நிப்டி 32.70 புள்ளிகள் உயர்ந்து 10,586.90 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகம், காப்பீடு, ஆட்டோ, மின்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
டிசிஎஸ், டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, இன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, ஆசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் 0.98 சதவீதம் வரை உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|