பதிவு செய்த நாள்
26 ஏப்2018
15:44

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜியோபோன் சாதனங்களின் விற்பனை இந்தியாவில் 4 கோடிகளை கடந்து இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் கிரெடிட் சூயிஸ் நடத்திய ஆய்வில் 2018-ம் ஆண்டு ஜனவரி - மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்திய பீச்சர்போன் சந்தையில் ஜியோபோன் மட்டும் 36 சதிவிகித பங்குகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் சுமார் 2.1 கோடி ஜியோபோன்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதை தெரியப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஜியோபோன் மாதம் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஜியோ அறிவித்த ரூ.49 சலுகையால் ஜியோபோன் விற்பனை மார்ச் மாதத்தில் அதிகரித்து இருக்கிறது. ஜியோபோன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜியோ வளர்ச்சிக்கு ஜியோபோன் முக்கிய பங்கு வகிப்பதாக எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளில் ஜியோபோன் விற்பனை துவக்க நிலையில் இருந்து நல்ல வரவேற்பை பெறும் அளவு கடந்துள்ளது.
வாட்ஸ்அப் சேவை வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோன் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஜியோ வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் 10 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|