பதிவு செய்த நாள்
26 ஏப்2018
16:04

புதுடில்லி : போக்குவரத்து நெரிசலால் இந்தியாவின் 4 பெருநகரங்களில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் என்கிற நிறுவனம் டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் இந்த 4 நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் தெரியவந்துள்ளது. நெருக்கடி நேரங்களான காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் குறிப்பிட்ட தொலைவைக் கடக்க மற்ற நேரங்களைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு நேரம் ஆவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மும்பை முதலிடத்திலும், கோல்கட்டா இரண்டாமிடத்திலும் உள்ளன. ஆய்வுக்காகப் பேட்டி கண்டவர்களில் 89 சதவீதத்தினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கார் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|