உயர்ந்து வரும் சர்வதேச வர்த்தகம்உயர்ந்து வரும் சர்வதேச வர்த்தகம் ... மின்னணு வழி சீட்டு நடைமுறை எளிமையாகிறது; சரக்கு போக்குவரத்தில் ஒரு முறை தான் ஆய்வு மின்னணு வழி சீட்டு நடைமுறை எளிமையாகிறது; சரக்கு போக்குவரத்தில் ஒரு முறை ... ...
‘டிவி’ விற்பனையில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2018
00:56

புது­டில்லி : சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘டிவி’ தயா­ரித்து கொடுக்­கும் பல நிறு­வ­னங்­கள், தற்­போது நேர­டி­யாக, ‘டிவி’ விற்­ப­னை­யில் இறங்­கு­வது அதி­க­ரித்­துள்­ளது.

உ.பி.யின் நொய்­டா­வைச் சேர்ந்த பல நிறு­வ­னங்­கள், ‘சாம்­சங், எல்.ஜி., ஹேயர்’ போன்ற சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்­கும், ‘வீடி­யோ­கான், பி.பி.எல்., கிர­வுன், சன்­டெக், மைக்­ரோ­மேக்ஸ், இன்­டெக்ஸ்’ போன்ற உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும், ‘டிவி’ தயா­ரித்து கொடுக்­கின்றன.

இந்த, ‘டிவி’க்கள் மீது, சாம்­சங், எல்.ஜி., உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், அவற்­றின் பிராண்டு பெயரை சூட்டி, விற்­பனை செய்­கின்றன. இந்­நி­லை­யில், தயா­ரிப்பு நிறு­வ­னங்­களே நேர­டி­யாக, ‘டிவி’ விற்­ப­னை­யில் இறங்கி வரு­கின்றன. சாம்­சங் நிறு­வ­னத்­திற்கு, ‘டிவி’ தயா­ரித்து கொடுத்து வந்த, ‘வீடி­யோ­டெக்ஸ்’ நிறு­வ­னம், தற்­போது, ‘தைவா’ என்ற பிராண்­டில், ‘டிவி’ விற்­ப­னையை துவக்­கி­யுள்­ளது. ஒரு மாதத்­தில், 3,000, ‘டிவி’க்கள் விற்­ப­னை­யா­வ­தாக கூறு­கிறது, இந்­நி­று­வ­னம்.

எஸ்.எஸ்.பி.எல்., நிறு­வ­னம், ‘கோடக்’ கேமரா நிறு­வ­னத்­தி­டம், அதன் பெயரை பயன்­ப­டுத்­தும் உரி­மம் பெற்று, ‘கோடக்’ ‘டிவி’யை விற்­பனை செய்­கிறது. அது­போல, ‘மல்­ஹோத்ரா எலக்ட்­ரா­னிக்ஸ்’ நிறு­வ­னம், ‘வைபர்’ பிராண்­டி­லும், ‘பெஸ்­டன்’ நிறு­வ­னம், ‘கெவின்’ பிராண்­டி­லும், ‘டிவி’க்களை விற்­பனை செய்­கின்றன. ‘வியரா டெக்­னா­ல­ஜிஸ்’ நிறு­வ­னம், ‘நோபிள் ஸ்கிடோ’ என்ற, ‘டிவி’ விற்­ப­னை­யில் ஈடு­பட்­டு உள்­ளது.

‘அமே­சான், பிளிப்­கார்ட்’ போன்ற வலை­தள சந்­தை­களில், இந்த, ‘டிவி’க்கள் மிகக் குறைந்த விலை­யில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்றன. இந்த, ‘டிவி’ தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் திறன், அனு­ப­வம் உள்­ளிட்ட பின்­ன­ணியை அறிந்­த­வர்­கள், அவற்­றின் பிராண்­டு­களை, தயக்­க­மின்றி வாங்­கு­கின்­ற­னர். ‘‘எனி­னும், ‘டிவி’ வினி­யோ­கம், விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை போன்­ற­வற்றை பொறுத்து தான் இந்­நி­று­வ­னங்­களின் வெற்றி உள்­ளது,’’ என்­கி­றார், ‘டிலோட்டா இந்­தியா’ நிறு­வ­னத்­தின் பங்­கு­தா­ரர், ரஜத் வாஹி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)