பதிவு செய்த நாள்
28 ஏப்2018
00:51
புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமை யிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2017-– 18ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 17.3 சதவீதம் உயர்ந்து, 9,435 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய, 2016 -– 17ம் நிதியாண்டின், இதே காலத்தில், 8,046 கோடி ரூபாயாக இருந்தது.இதன் வருவாய், 14.7 சதவீதம் அதிகரித்து, 84,037 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 20.6 சதவீதம் அதிகரித்து, 36,075 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், 510 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனம், 7,128 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நேற்று, மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்கு விலை, 2.15 சதவீதம் அதிகரித்து, 996 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|