‘இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளது’; ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மதிப்பீடு‘இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளது’; ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் ... ... முதலாண்டு பிரீமியம் வருவாய்: எல்.ஐ.சி., புதிய சாதனை முதலாண்டு பிரீமியம் வருவாய்: எல்.ஐ.சி., புதிய சாதனை ...
பங்கு வெளியீட்டில் பசுமை எரிசக்தி நிறுவனங்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2018
01:46

புதுடில்லி: மரபு சாரா எரி­சக்தி துறை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் கள­மிறங்கி, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இடம் பெறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளன. சூரிய ஒளி, காற்று, மாசு குறை­வான, உயிரி எரி­பொ­ருட்­கள் போன்றவற்றின் மூலம், மின் உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள், பசுமை நிறு­வ­னங்­கள் என அழைக்­கப்­படு­கின்­றன.
வர்த்­தக வாய்ப்பு : மத்­திய அரசு, சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்டை குறைக்க, பல்­வேறுநட­வ­டிக்­கை­களை எடுத்து வருகிறது. மத்­திய மின் உற்­பத்தி தொகுப்­பில், 2022ல், 175 கிகா வாட், மரபு சாரா எரி­சக்தி திறனை இணைக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு, 12 ஆயிரத்து, 500 கோடி டால­ருக்­கும் அதி­க­மாக, முத­லீடு தேவைப்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத­னால், மரபு சாரா எரி­சக்தி துறை நிறு­வ­னங்­க­ளின் எதிர்­கா­லம் பிர­கா­ச­மாக உள்­ளது. இத்­துறை நிறு­வ­னங்­கள், அவற்­றின் விரி­வாக்­கத் திட்­டங்­க­ளுக்கு தேவை­யான நிதியை, வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றி­டம் பெறு­கின்­றன. அவை, எதிர்­கால வர்த்­தக வாய்ப்­பு­களை கருதி, மின் உற்­பத்தி திட்­டங்­களை விரி­வாக்­கம் செய்ய விரும்­பு­கின்­றன.அத­னால், பங்­கு­களை வெளி­யிட்டு, பொது­மக்­க­ளி­டம் இருந்­தும் நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளன. அதற்­கேற்ப, தற்­போது, மரபு சாரா எரி­சக்தி துறை நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்ய, சர்­வ­தேச நிதி முதலீட்டு நிறு­வ­னங்­கள் ஆர்­வம் காட்­டு­கின்­றன. இத்­த­கைய சூழலை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் நோக்­கில், பசுமை எரி­சக்தி துறை­யைச் சேர்ந்த இரண்டு நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீடு மேற்­கொண்டு, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் இடம்­பெற உள்­ளன.பசுமை எரி­சக்தி துறை­யில், கடை­சி­யாக, 2010ல், ‘ஓரி­யண்ட் கிரீன் பவர்’ நிறு­வ­னம், பங்கு வெளி­யீடு மேற்­கொண்­டது.அதன் பின், முதன் முறை­யாக, இரண்டு பசுமை எரி­சக்தி நிறு­வ­னங்­கள் விரை­வில் பங்கு வெளி­யீடு மேற்­கொள்ள உள்­ளன.
அதானி குழு­மம் : அதில் முத­லா­வ­தாக, ‘அதானி என்­டர்­பி­ரை­சஸ்’ நிறு­வ­னத்­தின் அங்­க­மான, ‘அதானி கிரீன் எனர்ஜி’ அடுத்த சில வாரங்­களில், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, நிதி திரட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதில், அதானி என்டர்­ பி­ரை­சஸ் நிறு­வ­னம், அதானி கிரீன் எனர்­ஜி­யில் கொண்­டுள்ள பங்­கில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்­பனை செய்­யும் என, தெரி­கிறது.இந்­நி­று­வ­னம், இந்­தியா,ஆஸ்­தி­ரே­லியா மற்­றும் சில நாடு­களில், அதன் காற்­றாலை மின் உற்­பத்தி திறனை அதி­க­ரிக்க உள்­ளது.
எதிர்பார்ப்பு : ஹரி­யா­னா­வின் கூர்­கா­னைச் சேர்ந்த, ‘ரிநியூ பவர் வெஞ்­சர்ஸ்’ நிறு­வ­னம், ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில், காற்­றாலை, சூரிய சக்தி மூலம், 100 மெகா­வாட் மின் உற்­பத்தி திற­னு­டன் செயல்­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், விரை­வில் பங்கு வெளி­யீடு மேற்­கொண்டு, அதன் பங்குகளை, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட உள்­ளது.இந்த இரண்டு நிறு­வ­னங்­க­ளின் பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே ஆத­ரவு கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இதை தொடர்ந்து, மரபு சாரா எரி­சக்தி துறை­யைச் சேர்ந்த மேலும் பல நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கும் என, தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)