பதிவு செய்த நாள்
29 ஏப்2018
01:47
மும்பை: பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனம், 2017- – 18ம் நிதியாண்டில், அதன் காப்பீட்டு திட்டங்களின் கீழ், முதலாண்டு பிரீமியம் வருவாயாக, 1,34,552 கோடி ரூபாய் ஈட்டி, புதிய சாதனை படைத்துள்ளது. இது, 2016- – 17ம் நிதியாண்டில், 1,24,451 கோடி ரூபாயாக இருந்தது. ஆயுள் காப்பீட்டு துறையில், முதலாண்டு பிரீமியம் மற்றும் புதிய பாலிசிகள் விற்பனையில், எல்.ஐ.சி., நிறுவனம், முறையே, 69.40 சதவீதம் மற்றும், 75.67 சதவீத பங்களிப்புடன், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தனியார் துறையில், முதலாண்டு பிரீமியம் வருவாயில், எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ், 5.85 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் நிறுவனங் கள், முறையே, 5.66 சதவீதம் மற்றும், 4.70 சதவீதத்துடன் உள்ளன.தனியார் துறையில், காப்பீட்டு பாலிசிகள் விற்பனையில், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், 5.07 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், எச்.டி.எப்.சி., லைப் மற்றும், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் நிறுவனங்கள், முறையே, 3.72 சதவீதம் மற்றும், 2.97 சதவீதபங்களிப்புடன் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|