நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியில் சரிவுநவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியில் சரிவு ... நீங்கள் தவிர்க்க வேண்­டிய முத­லீட்டு தவ­றுகள் நீங்கள் தவிர்க்க வேண்­டிய முத­லீட்டு தவ­றுகள் ...
வைப்பு நிதி முத­லீட்டில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
03:21

வைப்பு நிதி முத­லீடு எளி­தா­னது என்­றாலும், சரி­யான வைப்பு நிதியை தேர்வு செய்ய பரி­சீ­லிக்க வேண்­டிய அடிப்­ப­டை­யான அம்­சங்கள் இருக்­கின்­றன.
சரா­சரி இந்­தி­யர்கள் பர­வ­லாக நாடும் முத­லீட்டு வாய்ப்­பாக வைப்பு நிதி அமை­கி­றது. குறிப்­பாக, நிலை­யான வரு­மானம் வேண்­டுவோர், வங்கி வைப்பு நிதி முத­லீட்டை அதிகம் நாடு­கின்­றனர். தற்­போது, வட்டி விகிதம் உயரத் துவங்­கி­யுள்ள சூழலில், வைப்பு நிதி மீதான கவ­னமும் அதி­க­ரித்­துள்­ளது. வங்­கிகளில் வைப்பு நிதி திட்­டத்தை தேர்வு செய்யும் போது, சிறந்த பலனை பெற பரி­சீ­லிக்க வேண்­டிய அடிப்­ப­டை­யான அம்­சங்­களை நிதி ஆலோ­ச­கர்கள் பரிந்­து­ரைக்­கின்­றனர். இவ்­வாறு மூன்று முக்­கிய அம்­சங்கள் சுட்டிக் காட்­டப்­ப­டு­கின்­றன.
வட்டி விகிதம் : வைப்பு நிதி என்­றதும் முதலில் நினை­வுக்கு வரு­வது, அதன் வட்டி விகித பலன் தான். வைப்பு நிதி திட்­டத்தை தேர்வு செய்யும் போது, முதலில் கவ­னிக்க வேண்­டி­யது வட்டி விகிதம் மற்றும் அதற்­கான கால அளவும் தான். வட்டி விகிதம், 60 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் மற்றும் மூத்த குடி­மகன்­க­ளுக்கு மாறு­ப­டு­வ­தோடு, கால அள­விற்கு ஏற்­பவும் மாறு­ப­டு­கி­றது. வங்­கி­க­ளுக்கு இடை­யேயும் வட்டி விகிதம் மாறு­ப­டலாம். தற்­போ­தைய சூழலில் வைப்பு நிதி வட்டி விகிதம் ஆண்­டுக்கு, 3.15 சத­வீ­தத்தில் இருந்து, 9 சத­வீதம் வரை இருக்­கி­றது. ஏழு நாள் முத­லீடு துவங்கி, 10 ஆண்­டுகள் வரை­யி­லான முத­லீடு வரை இது அமை­கி­றது. பொது­வாக பார்க்கும் போது, மத்­திய தர வங்­கிகள் மற்றும் கூட்­டு­றவு வங்­கிகள், பெரிய வங்­கி­களை விட அதிக வட்டி விகிதம் அளிக்கும் சூழல் உள்­ளன. வட்டி விகி­தத்தை ஒப்­பிட்டு பார்ப்­பது அவ­சியம். ஒரு சில வங்­கிகள், சேமிப்பு கணக்கில் இருந்து வைப்பு நிதிக்கு தானாக மாற்­றிக்­கொள்ளும், ‘ஸ்வீப் இன்’ வச­தி­யையும் அளிக்­கின்­றன. வைப்பு நிதி தேர்வில் பலரும் மனதில் கொள்ளும் மற்­றொரு அம்சம், வைப்பு நிதி துவக்கும் வச­தி­யாகும். பெரும்­பா­லானோர் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்­துள்ள வங்கி கிளை­யி­லேயே வைப்பு நிதி முத­லீட்­டையும் மேற்­கொள்­கின்­றனர். பல வங்­கிகள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ‘நெட் பேங்கிங்’ மூலம் முத­லீடு செய்யும் வச­தி­யையும் அளிக்­கின்­றன. ஸ்வீப் இன் வச­தி­யையும் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். சில வங்­கிகள், வாடிக்­கை­யா­ளர்கள் அல்­லா­தோரும் ஆன்­லைனில் வைப்பு நிதி துவக்க அனு­மதி அளிக்­கின்­றன. வைப்பு நிதி துவக்க, சேமிப்பு கணக்கு வைத்­தி­ருக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை. எனவே, சேமிப்பு கணக்கு உள்ள வங்­கியில் தான் வைப்பு நிதி முத­லீடு செய்ய வேண்டும் என்ற கட்­டாயம் இல்லை. சேமிப்பு கணக்கு வைத்­துள்ள வங்­கியில் வைப்பு நிதி வட்டி விகிதம் குறை­வாக இருந்தால், அதிக வட்டி தரும் வங்­கியை நாடலாம்.
அப­ராதம் : வைப்பு நிதியை விரும்­பிய போது விலக்கிக் கொள்­ளலாம் என்­றாலும், நிர்­ண­யிக்­கப்­பட்ட காலத்­திற்கு முன் முத­லீட்டை விலக்கிக் கொண்டால் அப­ராதம் விதிக்­கப்­படலாம். வட்டி விகித பலனில், 1 சத­வீதம் வரை இது அமை­யலாம். முதிர்வு காலத்­திற்கு முன் முத­லீட்டை விலக்­கினால், வட்டி விகித பலன் குறையும். அப­ராத தொகை வங்­கிக்கு வங்கி மாறு­ப­டு­வதால் இந்த அம்­சத்­தையும் மனதில் கொள்ள வேண்டும். பல வங்­கிகள் ஏழு நாட்­க­ளுக்கும் குறை­வான முத­லீட்­டிற்கு வட்டி அளிப்­ப­தில்லை. பொது­வாக, உட­ன­டி­யாக தேவைப்­ப­டாத தொகையை வைப்பு நிதியில் முத­லீடு செய்­வது பொருத்­த­மாக இருக்கும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இதனால், முதிர்­வுக்கு முன் விலக்கிக் கொள்ளும் சூழலை தவிர்க்­கலாம்.
ஆன்­லைனில் பி.பி.எப்., கணக்கு துவக்கும் வழி
பொது வருங்­கால வைப்பு நிதி என குறிப்­பி­டப்­படும், பி.பி.எப்., கணக்கு துவக்­கு­வதை மேலும் எளி­தாக்கும் வகையில், ஆன்­லைனில் கணக்கு துவக்கும் வசதி அமை­கி­றது. பி.பி.எப்., சேமிப்பை பெற, அனு­ம­திக்­கப்­பட்ட அஞ்சல் அலு­வ­ல­கங்கள் மற்றும் வங்­கி­களில், பி.பி.எப்., கணக்கை துவக்­கலாம். எனினும், ஆன்­லைனில் கணக்கு துவக்கும் வசதி வங்­கி­களில் மட்­டுமே அளிக்­கப்­ப­டு­கி­றது. ஒரு சில வங்­கிகள், ஆன்லைன் மூலம் கணக்கு துவங்கும் வச­தியை முழு­மையாக அளிக்­கின்­றன. சில வங்கிகள், பகுதி அளவு இந்த வச­தியை அளிக்­கின்­றன.பி.பி.எப்., கணக்கை ஆன்­லைனில் துவக்க, உறுப்­பினர் குறிப்­பிட்ட வங்­கியில் சேமிப்பு கணக்கு வைத்­தி­ருக்க வேண்டும். மேலும், ‘நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங்’ வச­தியை செயல்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும்; சேமிப்பு கணக்­குடன், ‘ஆதார்’ எண் இணைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.உறுப்­பினர், வங்­கியின் நெட் பேங்கிங் வச­தியில் நுழைந்து, பி.பி.எப்., கணக்கு துவக்கும் வச­தியை அணுக வேண்டும். பின், பி.பி.எப்., பணம் செலுத்­து­வ­தற்­கான சேமிப்பு கணக்கை தேர்வு செய்ய வேண்டும். வங்­கி­யிடம் சமர்ப்­பித்­துள்ள தக­வல்கள் அனைத்தும் இந்த கணக்­குடன் இணைக்­கப்­படும்.முதல் கட்ட தக­வல்­களை சமர்ப்­பித்­த­வுடன், ஆதார் சரி பார்க்கும் கட்டம் துவங்கும். ஆதார் எண்ணை சமர்ப்­பித்­ததும், ஒரு முறை, ‘பாஸ்­வேர்டு’ அனுப்பி வைக்­கப்­படும். இந்த எண்ணை சமர்ப்­பித்த பின், பி.பி.எப்., கணக்கு துவக்­கப்­படும்.பகுதி அளவு வசதி அளிக்கும் வங்­கியில், ஆரம்ப கட்ட தக­வல்­களை சமர்ப்­பித்த பின், படி­வத்தை அச்­சிட்டு கையெ­ழுத்­திட்டு வங்கி கிளையில் சமர்ப்­பிக்க வேண்டும்.
வரி சலு­கைகள் பற்றி அறி­யாத ஊழி­யர்கள்
ஊதிய அமைப்பில் உள்ள வரி சலுகை வாய்ப்­பு­களை பல ஊழி­யர்கள் அறி­யாமல் இருப்­பது, ஆய்வில் தெரிய வந்­துள்­ளது.வரி சேமிப்பு முத­லீடு மூலம் வரு­மான வரியை குறைக்க முடியும். அதே போல, ஊழி­யர்­களுக்­கான ஊதிய அமைப்பில் வரி சலுகை அளிக்கும் பிரி­வு­களும் உள்­ளன. உதா­ர­ண­மாக எரி­பொருள் கட்­டணம், தொலை­பேசி கட்­டணம், விடு­முறை பயண சலுகை, பரிசுக் கூப்­பன்கள் ஆகி­ய­வற்­றுக்கு வரி விலக்கு கோர முடியும்.எனினும், நான்கில் ஒரு ஊழி­யர்கள் இத்­த­கைய சலு­கை­களை சரி­யாக அறி­யாமல் இருப்­ப­தாக, நீல்சன் இந்­தி­யாவால் நடத்­தப்­பட்ட ஜேட்டா ஊழியர் நல ஆய்வு தெரி­விக்­கி­றது. இதன் கார­ண­மாக, இந்த சலு­கை­களை பலரும் முழு­மை­யாக பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல் இருக்­கின்­றனர். ஏழு நக­ரங்­களில், 194 வர்த்­தக நிறு­வ­னங்­களில் 1,233 ஊழி­யர்கள் மத்­தியில் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)