‘தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் சிறப்பான வர்த்தக வாய்ப்பு’‘தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் சிறப்பான வர்த்தக வாய்ப்பு’ ... சந்தை நிலவரம்  சீசன் பழங்­கள், ‘ஜோர்’ சந்தை நிலவரம் சீசன் பழங்­கள், ‘ஜோர்’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஏப்ரல் மாதத்தில் வாகனங்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2018
00:38

புது­டில்லி:ஏப்­ரல் மாதத்­தில் வாக­னங்­களின் விற்­பனை விப­ரங்­களை, வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் வெளி­யிட்டு வரு­கின்றன. அவற்­றில் சில:
மாருதி சுசூகி
மாருதி சுசூகி நிறு­வ­னம், ஏப்­ரல் மாதத்­தில், மொத்­தம், 1 லட்­சத்து, 72 ஆயி­ரத்து, 986 கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், 14.4 சத­வீ­தம் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 1 லட்­சத்து, 51 ஆயி­ரத்து, 215 கார்­களை இந்­நி­று­வ­னம் விற்­பனை செய்­துள்­ளது.நிறு­வ­னத்­தின் உள்­நாட்டு விற்­பனை, 14.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1 லட்­சத்து, 64 ஆயி­ரத்து, 978 கார்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 1 லட்­சத்து, 44 ஆயி­ரத்து, 492 கார்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்ளன.

ஆனால், சிறிய ரக கார்­க­ளைப் பொறுத்­த­வரை, ‘ஆல்டோ மற்­றும் வேகன் ஆர்’ கார்­கள் விற்­பனை, 2.8 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை சந்­தித்­துள்­ளது. 37,794 கார்­கள் இப்­பி­ரி­வில் விற்­பனை ஆகி­யுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 38,897 கார்­கள் விற்­ப­னை­யாகி இருந்­தன.ஏற்­று­ம­தி­யைப் பொறுத்­த­வரை, கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், 19.1 சத­வீ­தம் அதி­க­ரித்து, 8,008 கார்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 6,723 கார்­கள் விற்­ப­னை­யாகி இருந்­தன.

மகிந்­திரா அண்ட் மகிந்­திரா

ஏப்­ரல் மாதத்­தில், மகிந்­திரா அண்ட் மகிந்­திரா நிறு­வ­னத்­தின் மொத்த விற்­பனை, 48,097 ஆகும். கடந்த ஆண்டு, இதே மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், 22 சத­வீ­தம் அள­வுக்கு விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்டு ஏப்­ர­லில், மொத்­தம், 39,417 வாக­னங்­கள் விற்­கப்­பட்­டுள்ளன.

இந்­நி­று­வ­னத்­தின், பய­ணி­யர் வாகன விற்­பனை, 13 சத­வீ­தம் அதி­க­ரித்து, 21,927 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. வர்த்­தக வாக­னங்­களை பொறுத்­த­வரை, 26 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­ரித்து, 18,963 வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டு உள்ளன.

மகிந்­திரா டிராக்­டர்

மகிந்­திரா அண்ட் மகிந்­திரா நிறு­வ­னத்­தின் டிராக்­டர் விற்­பனை, 18 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஏப்­ரல் மாதத்­தில், மொத்­தம், 30,925 டிராக்­டர்­களை இந்­நி­று­வ­னம் விற்­பனை செய்­துள்­ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 26,151 டிராக்­டர்­களை விற்­பனை செய்­துள்­ளது. உள்­நாட்­டில், 29,884 டிராக்­டர்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.

ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை, 1,041 டிராக்­டர்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு, ஏப்­ர­லில், 943 டிராக்­டர்­கள் என்ற நிலை­யில் இருந்­தது.

டி.வி.எஸ்., மோட்­டார்

டி.வி.எஸ்., மோட்­டார் கம்­பெனி, ஏப்­ரல் மாதத்­தில் விற்­பனை, 24 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இந்­நி­று­வ­னம், மொத்­தம், 3 லட்­சத்து, 04 ஆயி­ரத்து, 795 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. முந்­தைய ஆண்டு ஏப்­ர­லில், 2 லட்­சத்து, 46 ஆயி­ரத்து, 310 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது.

இரு­சக்­கர வாக­னங்­களின் விற்­பனை மட்­டும், 2 லட்­சத்து, 93 ஆயி­ரத்து, 418 ஆகும். இதுவே கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 2 லட்­சத்து, 05 ஆயி­ரத்து, 522 இரு­சக்­கர வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.

டாடா மோட்­டார்ஸ்

டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னம் அதன் உள்­நாட்டு விற்­பனை, 86 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இந்­நி­று­வ­னம் ஏப்­ரல் மாதத்­தில், உள்­நாட்­டில், 53,511 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது.கடந்த ஆண்டு ஏப்­ர­லில், இதுவே, 28,844 வாக­னங்­கள் என்ற அள­வில் இருந்­தது.வர்த்­தக வாக­னங்­களை பொறுத்­த­வரை, 126 சத­வீ­தம் அதி­க­ரித்து, 36,276 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.கடந்த ஆண்டு ஏப்­ரல் விற்­பனை, 16,017 ஆகும். பய­ணி­யர் வாகன விற்­ப­னை­யும், 34 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.

வி.இ., கமர்­ஷி­யல் வெகிக்­கிள்ஸ்

வால்வோ குழு­ம­மும் எய்­சர் மோட்­டார்ஸ் நிறு­வ­ன­மும் இணைந்து நடத்­தும், கூட்டு நிறு­வ­ன­மான, வி.இ.சி.வி., ஏப்­ர­லில், 3,959 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. கடந்த ஆண்டு ஏப்­ர­லு­டன் ஒப்­பி­டும்­போது, 28.1 சத­வீ­தம் அள­வுக்கு விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 3,089 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது,

இந்­நி­று­வ­னம்.போர்டு இந்­தியாபோர்டு இந்­தியா நிறு­வ­னத்­தின், ஏப்­ரல் மாத மொத்த விற்­பனை , 39.23 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 25,149 வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்ட நிலை­யில், இந்த ஆண்டு ஏப்­ர­லில், விற்­பனை, 15,281 என்ற அள­வுக்கு குறைந்­து­விட்­டது. ஏற்­று­ம­தி­யும், 55.2 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.

ஹூண்­டாய் மோட்­டார்

இந்­நி­று­வ­னத்­தின் விற்­பனை, 6 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 56,368 வாக­னங்­களை விற்ற நிலை­யில், இந்த ஆண்டு ஏப்­ர­லில், 59,744 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. ஏற்­று­மதி 12 சத­வீ­தம் அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)