பதிவு செய்த நாள்
03 மே2018
10:57

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மே 3) உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 80.89 புள்ளிகள் உயர்ந்து 35,257.31 புள்ளிகளாகவும் இருந்தது. ஆனால் வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சந்தைகள் சரிவை சந்தித்தன. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, அடுத்த வாரம் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் ஆகியவற்றால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன.
இதனால் வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 4.36 புள்ளிகள் சரிந்து 35,172.06 புள்ளிகளாகவும், நிப்டி 6.10 புள்ளிகள் சரிந்து 10,711.90 புள்ளிகளாகவும் உள்ளது. ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டல்கோ, கெயில் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம், எம்ஆர்எப், நேஷனல் பெர்டிலைசர்ஸ், பாரத் போர்ஜ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 12 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|