ஸ்ரீபெரும்புதுாரில் 8,000 வேலைவாய்ப்பு உருவாகும்ஸ்ரீபெரும்புதுாரில் 8,000 வேலைவாய்ப்பு உருவாகும் ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்தது உலக தங்க கவுன்சில் அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2018
00:58

மும்பை:‘இந்­தி­யா­வில் தங்­கத்­தின் தேவை குறைந்­துள்­ளது’ என, உலக தங்க கவுன்­சில் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, இக்­க­வுன்­சில் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யி­லான காலாண்­டில், இந்­தி­யா­வில் தங்­கத்­திற்­கான தேவை, 12 சத­வீ­தம் குறைந்து, 115.6 டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலாண்­டில், 131.2 டன்­னாக இருந்­தது.

சுப முகூர்த்தம்

இதே காலத்­தில், தங்­கத்­தின் தேவை, மதிப்பு அடிப்­ப­டை­யில், 8 சத­வீ­தம் குறைந்து, 34 ஆயி­ரத்து, 440 கோடி­யில் இருந்து, 31 ஆயி­ரத்து, 880 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.இந்­தி­யா­வில் தங்­கத்­திற்­கான தேவை குறைய, பல கார­ணங்­களை கூற­லாம். பிப்., 1ல் தாக்­கல் செய்­யப்­பட்ட, மத்­திய பட்­ஜெட்­டில், தங்­கம் இறக்­கு­மதி வரி குறைக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது.

கடந்த ஆண்­டின் முதல் காலாண்டை விட, நடப்­பாண்­டின் முதல் காலாண்­டில், சுப முகூர்த்த நாட்­கள் குறை­வாக இருந்­தன. மேலும், தங்­கம் விலை­யும் அதி­க­மாக இருந்­தது. அமைப்பு சாரா துறை­யி­னர், ஜி.எஸ்.டி., முறைக்கு மாறு­வ­தில் சந்­தித்த பிரச்­னை­களும், தங்­கத்­திற்­கான தேவைப்­பா­டில் சிறிது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ உள்­ளது.

மேலும், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், வைர வியா­பா­ரி­க­ளான, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகி­யோ­ரின், 13 ஆயி­ரம் கோடி ரூபாய் மோச­டி­யா­லும், தங்­கம் மீதான வர்த்­த­கம் சுணக்­கம் கண்­டுள்­ளது.இது போன்ற கார­ணங்­க­ளால், மதிப்­பீட்டு காலாண்­டில், தங்­கத்­திற்­கான தேவை குறைந்­தி­ருந்­தது.
இந்­தாண்­டின் முதல் காலாண்­டில், தங்க ஆப­ர­ணங்­க­ளுக்­கான தேவை, 12 சத­வீ­தம் குறைந்து, 87.7 டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்­டில், 99.2 டன்­னாக இருந்­தது.
வரி சேமிப்பு
இதே காலத்­தில், மதிப்பு அடிப்­ப­டை­யி­லான தங்க ஆப­ர­ணங்­கள் விற்­பனை, 7 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 26 ஆயி­ரத்து, 50 கோடி­யில் இருந்து, 24 ஆயி­ரத்து, 130 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட தங்­கத்­தின் அளவு, 3 சத­வீ­தம் குறைந்து, 14.5 டன்­னில் இருந்து, 14.1 டன்­னாக இறக்­கம் கண்­டு உள்­ளது.
இந்­தாண்­டின் முதல் காலாண்டு, தங்­கம் வணி­கத்­திற்கு அவ்­வளவு சிறப்­பாக இல்லை. நிதி­யாண்­டின் முடி­வை­யொட்டி, மக்­களின் கவ­னம், வரி சேமிப்பு இனங்­களின் மீது திரும்­பி­யி­ருந்­தது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தாண்டு, ஜன., – மார்ச் காலாண்­டில், தங்­கம் இறக்­கு­மதி, 50 சத­வீ­தம் குறைந்து, 153 டன்­னாக சரி­வ­டைந்­தது. இது, 2017 ல், இதே காலாண்­டில், 260 டன்­னாக இருந்­தது. இந்­தாண்­டும், தங்­கம் இறக்­கு­ம­தி­யில் அதிக மாற்­றம் இருக்­காது எனத் தெரி­கிறது. முழு ஆண்­டில், தங்­கத்­திற்­கான தேவை, 700 – -800 டன்­னாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, கிரா­மப்­புற மக்­களின் வரு­வாய் உயர்வு, சிறப்­பான பருவ மழை குறித்த கணிப்பு ஆகி­யவை, தங்­கத்­திற்­கான தேவையை அதி­க­ரிக்க துணை புரி­யும்.பி.ஆர்.சோமசுந்தரம்
நிர்வாக இயக்குனர், உலக தங்க கவுன்சில்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)