பதிவு செய்த நாள்
05 மே2018
00:52

புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் அளித்த விண்ணப்பம் மீதான பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளதாக, ‘செபி’ தெரிவித்துள்ளது.
இதனால், பங்கு வெளியீடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, ‘மியூச்சுவல் பண்டு’ முதலீடு, பங்கு முதலீடு உள்ளிட்ட நிதி நிர்வாகச் சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 2.54 கோடி பங்குகளை விற்பனை செய்ய அனுமதி கோரி, செபியிடம், மார்ச்சில் விண்ணப்பித்தது.
செபி அனுமதி அளிக்கும்பட்சத்தில், ஏப்ரல் இறுதியில் பங்குகளை வெளியிட்டு, நடப்பு மே இரண்டாவது வாரத்தில், பங்குச் சந்தை பட்டியலில் இணைய, நிறுவனம் திட்டமிட்டிருந்தது.இந்நிலையில், ‘பங்கு வெளியீட்டு விண்ணப்பம் தொடர்பான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என, எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு, செபி கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், நிறுவனத்தின் முந்தைய விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், விதிமீறல் விபரங்களை, செபி வெளியிடவில்லை.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|