பதிவு செய்த நாள்
05 மே2018
00:54

புதுடில்லி:‘சர்க்கரை உற்பத்தி, 3.20 கோடி டன் என்ற புதிய உச்சத்தை எட்டும்’ என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:
நடப்பு, 2017- – 18ம் சர்க்கரை பருவம், செப்டம்பரில் முடிகிறது. ஏப்ரல் வரை, 3.10 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும், 130 ஆலைகள், சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அதனால், செப்.,க்குள், சர்க்கரை உற்பத்தி, 3.15 – 3.20 கோடி டன் என்ற புதிய உச்சத்தை எட்டும் எனத் தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 2016 -– 17ம் சர்க்கரை பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.03 கோடி டன்னாக இருந்தது.உற்பத்தி அதிகரிப்பால், சர்க்கரை விலை சரிந்துள்ளது. இதனால், சர்க்கரை ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ சர்க்கரை உற்பத்திக்கு, சராசரியாக, 35 ரூபாய் செலவாகிறது. ஆனால், ஆலைகள், 26 – -27 ரூபாய்க்கு விற்பனை செய்வதால், 8 – -9 ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன.
சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம், மத்திய அரசு, ஆலைகள் சார்பில், விவசாயிகளுக்கு, நிலுவை தொகையில், 1,540 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|