காப்­பீடு பாலிசி விற்­ப­னையில்  அறிய வேண்­டிய உத்­திகள்  காப்­பீடு பாலிசி விற்­ப­னையில் அறிய வேண்­டிய உத்­திகள் ... மாற்றி யோசித்­தா­லன்றி தீர்­வில்லை! மாற்றி யோசித்­தா­லன்றி தீர்­வில்லை! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முத­லீட்­டா­ள­ரின் தற்­போ­தைய சவால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2018
00:45

இந்­திய பொரு­ளா­தா­ரம் அமைப்பு சார்ந்­தும், சாரா­ம­லும் தொடர்ந்து இயங்கி வரு­வது, நாம் அனை­வ­ரும் அறிந்த உண்மை. இரண்­டும் தொடர்ந்து வளர்ச்சி பாதை­யில் முன்­னேற்­றம் கண்­டுள்­ள­தை­யும் யாரும் மறுக்க முடி­யாது.
ஒன்­றின் வளர்ச்சி, இன்­னொன்­றி­லும் பெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தவிர்க்க முடி­யா­தது. வாழ்க்கை முறை­யா­கவே இவ்­வி­ரண்­டும் ஒருங்கே இயங்­கிய சூழல் பல காலம் நிலைத்­தது. இதற்கு ரொக்­கப் பொரு­ளா­தா­ரம் வழி வகுத்­தது.
ஆனால், காலப்­போக்­கில் அமைப்பு சாரா பொரு­ளா­தா­ரத்­தின் அப­ரி­மி­த­மான வளர்ச்சி, அமைப்பு சார்ந்த பொரு­ளா­தா­ரத்தை பாதிக்­கும் சூழலை உரு­வாக்­கி­யது. பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தம் இந்த தவ­றான வளர்ச்­சிக்கு எளி­தில் வழி­வ­குத்து, மாற்­றுப் பொரு­ளா­தா­ரத்­தில் கறுப்பு பணம் சேக­ரித்து வளர்­வ­தையே ஊக்­கு­வித்­தது.

சீர்­தி­ருத்­தத்­தின் பலன்­கள், நேர்­மை­யாக வரி செலுத்­து­வோரை விட, அப்­பட்­ட­மாக வரி ஏய்ப்பு செய்­வோ­ரையே சென்று அடைந்­தது. ரொக்­க­மாக பணம் சேக­ரித்து, ரொக்­க­மா­கவே முத­லீடு செய்­யும் கலா­சா­ரமே ஓங்­கி­யது. இதில், எங்­கும் வரி­களின் நிழல் கூட பட­வில்லை. அடிப்­ப­டை­யில், சீர்­தி­ருத்­தத்­தின் நோக்­கம் இது அல்ல என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.
இதன் ஒட்டு மொத்த பிர­தி­ப­லிப்பு, ரியல் எஸ்­டேட் துறை­யில் தெரிந்­தது. அதன் அப­ரி­மி­த­மான வளர்ச்­சிக்கு முக்­கிய கார­ண­மாக கூட மாற்­றுப் பொரு­ளா­தா­ரத்தை கூற­லாம். ரொக்க முத­லீ­டு­களை பங்­குச் சந்­தைக்­குள் அரசு விட­வில்லை என்­பதை இங்கு புரிந்து கொள்­வது மிக அவ­சி­யம்.
பங்­குச் சந்­தை­கள் பல ஆண்­டு­கள் தொய்­வான போக்­கில் இருந்­த­தற்­கும், இது முக்­கிய கார­ண­மாக அமைந்­தது. மாற்­றுப் பொரு­ளா­தா­ரத்­தால், அமைப்பு சார்ந்த பொரு­ளா­தா­ரம் சந்­தித்த சவால்­களும், பங்­குச் சந்தை ஏற்­றம் காணா­த­தற்கு இன்­னொரு முக்­கிய கார­ணம்.
பொரு­ளா­தா­ரம் சிறப்­பாக வளர்ந்­தும், அமைப்பு சார்ந்த நிறு­வன வளர்ச்­சி­யும், வரி­களில் காண வேண்­டிய வளர்ச்­சி­யும் ஏற்­ப­டா­மல், நாட்­டின் பொரு­ளா­தா­ரம் தத்­த­ளித்­தது. இதற்கு அவ­சர மாற்று தேவைப்­பட்­டது. அது, முத­லீ­டு­கள் வழி­யாக அமை­யும் என்று ஒரு கால­கட்­டத்­தில் அரசு நம்­பி­யது. இதற்கு மாற்­றா­கத்­தான், முத­லீ­டு­களை ஏற்­ப­டுத்­தும் நோக்­கோடு, பெருங்­க­டன் பெருக்­கத்தை ஏற்­ப­டுத்த, அரசு, 2007ல் இருந்து முயன்­றது.
ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்­க­வில்லை. மாறாக, அந்த முயற்சி இன்­றைய வாராக்­க­டன் சுமை­யாக உரு­வெ­டுத்­தது. அர­சின் பிரச்­னை­கள் ஒன்­றின் பின் ஒன்­றாக வளர்ந்­தன.ஆக, நிலை­யான மாற்­றுப் பொரு­ளா­தார சிந்­த­னைக்­கான அவ­சர தேவை உரு­வெ­டுத்­தது. வருங்­கால பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு ஏற்ற வரி வசூலை ஏற்­ப­டுத்­து­வது தான் நிலை­யான நெடுங்­கால தீர்வு என்­பதை அர­சும், அதி­கார வர்க்­க­மும் உணர்ந்­தன.
அதை அவ­சர தேவை­யா­க­வும் அடை­யா­ளம் கண்டு, வரி சீர்­தி­ருத்­தத்­தின் அடுத்த கட்ட நகர்­வான, ஜி.எஸ்.டி.,யை அரசு அதி­ர­டி­யாக அம­லுக்கு கொண்டு வந்­தது. தொழில்­நுட்ப ரீதி­யான சவால்­க­ளை­யும், குறை­வான காலக்­கெ­டு­வை­யும் கடந்து, இந்த நகர்வு வெற்றி அடைந்­து­விட்­டதை நம்­மால் தெளி­வாக உணர முடி­கிறது.
பங்­குச் சந்­தை­யும் இதைப் புரிந்து நக­ரும். அமைப்பு சார்ந்த பொரு­ளா­தா­ரம் வெகு­வாக வளர்­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டு­விட்­டதை தெளி­வா­கப் பார்க்க முடி­கிறது. அமைப்பு சாரா­ம­லி­ருப்­போ­ரும் மாறும் சூழல் வரும். நாடு அடுத்­த­கட்ட வளர்ச்­சிக்கு தயா­ராகி விட்­டதே, கடந்த நான்கு ஆண்­டு­களில் நம் சாதனை. அடுத்த ஐந்து ஆண்­டு­களில், நம் வளர்ச்சி பெரு­கும்; பொரு­ளா­தார சூழல் மேம்­படும். அதற்­கான கட்­ட­மைப்பு அமைந்­து­விட்­டது. அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்டு பெரு­வா­ரி­யான சீர்­தி­ருத்­தங்­கள் தொட­ரும்­ என்­பதை நாம் உணர வேண்­டும். சந்­தை­யின் ஒரு­மித்த கருத்­தாக இது மாறும் காலம் ஏற்­படும். அதை முந்­திக்­கொள்­வதே ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் தற்­போ­தைய சவால்.

ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் பங்குச்சந்தை

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)