பிளிப்கார்ட்டை கையகப்படுத்தியது வால்மார்ட்பிளிப்கார்ட்டை கையகப்படுத்தியது வால்மார்ட் ... ரூ.24,000 ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.24,000 ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம் விலை ...
இந்திய பொருளாதாரம் 7.4 சதவீதமாக உயரும் பன்னாட்டு நிதியம் ஆய்வறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2018
00:31

வாஷிங்டன்/புதுடில்லி:‘இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு நிதி­யாண்­டில், 7.4 சத­வீ­த­மாக உய­ரும்’ என, பன்­னாட்டு நிதி­யம் தெரி­வித்­து உள்­ளது.
இந்த அமைப்­பின் ‘ஆசிய மற்­றும் பசு­பிக் பிராந்­தி­யத்­தின் பொரு­ளா­தார பார்வை’ என்ற ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:நடப்­பாண்­டி­லும், வரும் ஆண்­டி­லும், ஆசிய நாடு­க­ளின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.6 சத­வீ­த­மாக இருக்­கும். சர்­வ­தேச அள­வில் தேவைப்­பாடு அதி­க­ரித்து வரு­கிறது. அர­சி­யல் கொள்­கை­களும் சாத­க­மாக உள்­ளன. அத்­து­டன், நிதி­யா­தா­ரங்­களும் வலு­வாக உள்­ள­தால், ஆசிய நாடு­க­ளின் வளர்ச்சி நன்கு இருக்­கும்.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., போன்ற பாதிப்­பு­களில் இருந்து, இந்­தியா மீண்டு விட்­டது. அத­னால், நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், அதன் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.4 சத­வீ­தம்; அடுத்த நிதி­யாண்­டில், 7.8 சத­வீ­தம் என்ற அள­வில் அதி­க­ரிக்­கும்.
இந்­தாண்டு, சீனா­வின் பொரு­ளா­தா­ரம், 6.6 சத­வீ­த­மாக இருக்­கும். இது, அடுத்த ஆண்டு, 6.4 சத­வீ­த­மாக குறை­யும்.ஆசிய நாடு­க­ளின் வளர்ச்சி நன்கு இருக்­கும் என்ற போதி­லும், சில இடர்ப்­பா­டு­களும், சவால்­களும் உள்­ளன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. குறிப்­பாக, சர்­வ­தேச சிக்­கன நட­வ­டிக்­கை­கள், உள்­நாட்டு நலனை பாது­காப்­போம் என்ற கொள்கை முழக்­கங்­கள் போன்­ற­வற்றை கூற­லாம்.
மேலும், பணி செய்ய இய­லாத வய­து­டை­யோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தும்; உற்­பத்தி வளர்ச்­சி­யில் தொய்­வும்; அதி­க­ரித்து வரும் டிஜிட்­டல் பொரு­ளா­தா­ர­மும், சவா­லான அம்­சங்­க­ளாக இருக்­கும்.ஆசிய நாடு­களில், பல ஆண்­டு­க­ளுக்­குப் பின், தற்­போது தான், பண­வீக்­கம் மிகக் குறை­வாக உள்­ளது. முக்­கி­ய­மாக, உணவு மற்­றும் எரி­சக்தி துறை­கள் நீங்­க­லான பண­வீக்­கம், பல நாடு­களில் குறைந்து காணப்­ப­டு­கிறது.
கடந்த,2017ல், ஆசிய பிராந்­தி­யத்­தில் முன்­னே­றிய நாடு­க­ளின் சரா­சரி பண­வீக்­கம், மதிப்­பீட்டை விட, 0.6 சத­வீ­தம் குறை­வாக இருந்­தது. முன்­னேறி வரும் நாடு­களில், சரா­சரி பண­வீக்­கம், இலக்கை விட, 0.8 சத­வீ­தம் குறைந்து காணப்­பட்­டது.எனி­னும், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், செப்­டம்­பர் முதல், பண­வீக்­கம் சற்று அதி­க­ரித்து வரு­கிறது.
சர்­வ­தேச நில­வ­ரங்­களில் காணப்­படும் தற்­கா­லிக மாற்­றங்­கள், உணவு பொருட்­கள் விலை சரிவு மற்­றும் இறக்­கு­மதி பொருட்­க­ளின் பண­வீக்­கம் குறைந்­தி­ருப்­பது போன்­ற­வற்­றால், ஆசிய பிராந்­தி­யத்­தின் பண­வீக்­கம் குறை­வாக உள்­ளது.
பண­வீக்­கத்­தால் பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­படும் தாக்­கம் குறை­வாக உள்­ள­தும், ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. அத­னால், பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும்­பட்­சத்­தில், அதை குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கும் போது, உற்­பத்தி குறை­யும் அபா­ய­மும் உள்­ளது. அதன் கார­ண­மாக, ஆசிய நாடு­க­ளின் மத்­திய வங்­கி­கள், பண­வீக்க அறி­கு­றி­களை உன்­னிப்­பாக கவ­னித்து, தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்க தயா­ராக இருக்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இந்தியா – சீனாஆசிய நாடு­கள், சர்­வ­தேச பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு தொடர்ந்து உந்­து­சக்­தி­யாக விளங்கி வரு­கின்­றன. உலக நாடு­க­ளின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், ஆசிய நாடு­க­ளின் பங்­க­ளிப்பு, 60 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது. அதில், 40 சத­வீத பங்­க­ளிப்பை, இந்­தி­யா­வும், சீனா­வும் கொண்­டுள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)