சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஓட்டல் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.,சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஓட்டல் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., ... 50 சில்லரை விற்பனை கடைகள் இந்தியாவில் திறக்கிறது, 'வால்மார்ட்' 50 சில்லரை விற்பனை கடைகள் இந்தியாவில் திறக்கிறது, 'வால்மார்ட்' ...
சச்சினை பிரிவது சோகம்: பின்னி பன்சால்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2018
00:50

புதுடில்லி:‘‘பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில் இருந்து, சச்­சின் பன்­சால் வில­கு­வது, என்னை சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது,’’ என, அந்­நி­று­வ­ன­ருள் ஒரு­வ­ரான, பின்னி பன்­சால் தெரி­வித்­துள்­ளார்.வலை­த­ளத்­தில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘பிளிப்­கார்ட்’ நிறு­வ­னத்­தின், 77 சத­வீத பங்­கு­களை, அமெ­ரிக்­கா­வின், ‘வால்­மார்ட்’ நிறு­வ­னம், 1,600 கோடி டால­ருக்கு வாங்­கி­யுள்­ளது. இது, ரூபாய் மதிப்­பில், 1.12 லட்­சம் கோடி­யா­கும்.
இந்த ஒப்­பந்­தப்­படி, பிளிப்­கார்ட் நிறு­வ­னர், சச்­சின் பன்­சால், 5.5 சத­வீத பங்­கு­களை ஒப்­ப­டைத்து, 100 கோடி டாலர், அதா­வது, 6,800 கோடி ரூபாய் பெற்று, வெளி­யே­றி­யுள்­ளார்.ஆனால், பின்னி பன்­சால், பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில், 6 சத­வீத பங்­கு­க­ளு­டன், அதன் தலைமை செயல் அதி­கா­ரி­யாக தொடர்ந்து நீடிக்­கி­றார்.
இந்த இரு பன்­சால்­களும் உற­வி­னர்­கள் அல்ல என்­ற­ போ­தி­லும், டில்லி, ஐ.ஐ.டி.,யில் ஒன்­றாக படித்த போது, ஆழ­மான நட்பு உரு­வா­னது.இவர்­கள் இரு­வ­ரும் இணைந்து, 2007ல், நான்கு லட்­சம் ரூபாய் முத­லீட்­டில் உரு­வாக்­கிய,பிளிப்­கார்ட், 11 ஆண்­டு­களில், 1.47 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள நிறு­வ­ன­மாக உயர்ந்­துள்­ளது.
இது குறித்து, பின்னி பன்­சால் கூறி­ய­தா­வது:கடந்த, 2005ல் படித்து முடித்து, பெங்­க­ளூரு வந்­தோம். சச்­சின், ‘அமே­சான்’ நிறு­வ­னத்­தில் சேர்ந்­தார். அவர் பரிந்­து­ரை­யில், எனக்­கும் அங்கு வேலை கிடைத்­தது. ஆனால், சில மாதங்­களில் விலகி, இரு­வ­ரும் இணைந்து, பிளிப்­கார்ட் வலை­தள நிறு­வ­னத்தை உரு­வாக்கி, முத­லில் புத்­த­கங்­களை விற்­பனை செய்ய துவங்­கி­னோம்.
இரு­வ­ரும், ஒரே பைக்­கில், தின­மும், 50 கி.மீ., சுற்றி, அலைந்து, பல்­வேறு பதிப்­ப­கங்­க­ளி­டம் புத்­த­கங்­களை வாங்கி, அவற்றை, ‘பேக்’ செய்து, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைப்­போம். எங்­கள் உழைப்­பின் பய­னால், இன்று வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்கை, 10 கோடியை தாண்­டி­யுள்­ளது. சச்சினுக்கு நானும், எனக்கு அவ­ரும் துாண் போல் ஆத­ர­வாக இருந்­தோம். தற்­போது, சச்­சின் வில­கு­வது, எனக்கு மிகுந்த சோகத்தை ஏற்­ப­டுத்­தி­ உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
இது தான் தருணம்
பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில் என் பணி முடிந்து விட்­டது. என் பொறுப்பை ஒப்­ப­டைக்க வேண்­டிய தரு­ணம் வந்து விட்­ட­தால், வெளி­யே­று­கி­றேன்.
சச்சின் பன்சால்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)