ரூ.24,000 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலைரூ.24,000 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை ... குடும்ப தலைவியரை கூலாக்கும் உலர் அரவை இயந்திரம் குடும்ப தலைவியரை கூலாக்கும் உலர் அரவை இயந்திரம் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வாழ்க்கையை அழகாக்கும் ‘ZIVA’ - அருண் எக்ஸெல்லோவின் புதிய ஆரம்பம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2018
17:52

இதுவரை வளர்த்து, வாழ வைத்த பெற்றோர்களின் ஓய்வுக்காலத்தை, ரம்மியமான சூழலுடன் கூடிய இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே, ஒவ்வொரு மகன் / மகளுடைய பெரும் கனவாக இருக்கும். இதற்காக எங்கெங்கோ மனைகளை, பார்ம் ஹவுஸ்களை வாங்கிப் போட்டுவிட்டு, எதுவும் சரிபடாமல் கடைசியில் வருத்தப்படும் நிலை இனியும் இருக்காது என்கிறது அருண் எக்ஸெல்லோ நிறுவனம். வெளிநாடுகளில் நாம் கேள்விப்பட்டிருக்கும் ஓய்வுக்கால வீடுகளை ’ZIVA’ புராஜெக்ட் மூலம் சென்னையில் அறிமுகப்படுத்துகிறது அருண் எக்ஸெல்லோ.
நம்பகமான முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக அறியப்படும் அருண் எக்ஸெல்லோ. தனது ஒவ்வொரு புராஜெக்ட்டிலும், தனித்துவத்தை கொண்டு வந்து, கட்டுமானத்தில் புது புது உத்திகளை புகுத்தி, வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது. அருண் எக்ஸெல்லோ அறிமுகப்படுத்தும் ‘ZIVA’என்கிற புதிய புராஜெக்ட், தனித்துவமானது. ஆம், எல்லோருக்குமானது கிடையாது. தங்களின் முதுமைப் பருவத்தில், இளமையாக, மனநிறைவுடன் சுயமாக வாழ ஆசைப்படுபவர்களுக்கு மட்டும்! குடும்பத்துக்காகவும் மற்றவர்களுக்காகவும் உழைத்து சோர்ந்த முதியவர்களுக்கு, அமைதியான வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொடுப்பதுதான் ZIVA-வின் ஒரே நோக்கம்.
இவர்கள் கட்டும் இந்த அழகான வீடுகளில் வசிப்பவர்கள், 50 வயதை கடந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது அந்த குடும்பத்தில் ஒருவர் 50 வயதை கடந்தவராக இருக்க வேண்டும் என்பதே இங்கு வீடு வாங்க முதல் விதிமுறை. ‘சீனியர் லிவிங் கான்செப்ட்’ முறையில் இந்த புராஜெக்ட்டை அமைக்கிறது அருண் எக்ஸெல்லோ. முதியவர்களுக்காக பிரத்யேகமான அப்பார்ட்மென்ட்கள் சில இருந்தாலும், அருண் எக்ஸெல்லோ நிறுவனத்திலிருந்து உருவாகும் முதல் ரிடையர்மென்ட் லிவிங் புராஜெக்ட் இது என்பது குறிபிடத்தக்கது.
ரம்மியமான சூழலில் ZIVAசென்னையில் இருந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.,) மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.,) ஆகிய இரண்டும் இணையும் இடமான பூஞ்சேரி ஜங்ஷனில் இருந்து, 750மீ தொலைவில் ZIVA புராஜெக்ட் அமைகிறது. சுற்றிலும் கட்டிடங்கள், போக்குவரத்து நெரிசல், இரைச்சலான சத்தம் என, எதையும் ஜிவாவுக்கு பக்கத்தில் பார்க்கவே முடியாது. இங்கு கட்டிடங்கள் அமையும் இடத்தின் மொத்த பரப்பளவு, 16 ஏக்கர்கள். இதில் இப்போது ஆறு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே வீடுகள் கட்டப்படும். தென்னந் தோப்புகள், அழகான ஏரிக்கரை என ரம்மியமான சூழலுக்கு நடுவே அமைவது தான், மற்ற புராஜெக்ட்களில் இருந்து ZIVA வை தனித்துக் காட்டுகிறது. இந்த மாதிரியான வாழ்க்கையைத் தான், எல்லோருமே ஓய்வு காலத்தில் வாழ ஆசைப்படுவோம். அந்த ஆசைக்கான அஸ்திவாரத்தை, ZIVA அமைத்து கொடுக்கிறது.
நம்பமுடியாத விலையில் ப்ளாட்ஸ் & வில்லாஸ்A, B, C என, மூன்று பிளாக்குகளாக அப்பார்ட்மென்ட் வீடுகள் கட்டப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் 18 வில்லா வீடுகள் இங்கு அமைக்கப்படுகின்றன. ‘A’ பிளாக்கில் இருக்கும் வீடுகள், 645 சதுர அடி பரப்பளவு கொண்டவை. இதில் ஒருபடுக்கை அறை, வரவேற்பு அறை மற்றும் சமையல் அறை ஆகியவை அடக்கம். படுக்கை அறையில் அட்டாச்டு பாத்ரூம் உண்டு. A பிளாக்கில் இருக்கும் ப்ளாட்டின் விலை 32 லட்சம் ரூபாய் மட்டுமே.
‘B’ பிளாக்கில் இருக்கும் வீடுகள், 1,100 சதுர அடி பரப்பளவு கொண்டவை. இந்த வீடுகள் பிரீமியம் வகையைச் சேர்ந்தவை. இந்த வகை ப்ளாட்டின் விலை, 55 லட்சம் ரூபாய். இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகள் இவை. 920 சதுர அடிகொண்ட இரண்டு படுக்கையறை கொண்ட வீடுகள் ‘C’ பிளாக்கில் கட்டப்படுகின்றன. இதன் ப்ளாட்டின் விலை, ரூ.47 லட்சம். மேலும், 1,500 சதுர அடி பரப்பளவு கொண்ட, 18 வில்லா வகை வீடுகளும் கட்டப்பட்டிருக்கின்றன. இவை முன்று படுக்கையறைகள் கொண்டவை. இந்த வில்லா ஒன்றின் விலை, ரூ.1.275 கோடி.
ZIVAவில் எல்லாமே இருக்கிறது!இங்கு கட்டப்படும் வீடுகள் வயதானவர்களுக்கானது என்பதால், உணவு, பாதுகாப்பு, சுத்தம் மற்றும் உடல்நலம் ஆகிய நான்கு முக்கிய விஷயங்களை மையப்படுத்தி இந்த குடியிருப்புகள் அமையும். இவை சார்ந்த சேவைகள், 24 மணி நேரமும் கிடைக்கும்படி, இந்த புராஜெக்ட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு வளாகத்துக்குள் மெடிகல் ஷாப், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் அருகில் இருக்கும் சில மருத்துவமனைகளுடன் கூட்டு என, மருத்துவம் சார்ந்த வசதிகளை ஏற்படுத்தியுள்ளது அருண் எக்ஸெல்லோ.
சுமார் 200 பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் வகையில் டைனிங் ஹால் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் சமையலறையுடன் கட்டப்பட்டிருந்தாலும், உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், தூய சைவ மற்றும் சாத்விக உணவு வகை மட்டுமே கிடைக்கக் கூடிய காமன் கிச்சன் கான்சப்ட்டும் ZIVA-வில் இருக்கிறது.
குடியிருப்புவாசிகளின் ஆன்மிகத் தேவையும் நிறைவேற்றும் விதமாக, ZIVA-வில் சிவா விஷ்ணு ஆலயமும் உண்டு. இயற்கைக் காற்றை சுவாசிக்கவும், நடைப் பயிற்சி செய்யவும் கார்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக ஜாகிங், வாக்கிங் டிராக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இதுதவிர நீச்சல்குளம், உடற்பயிற்சி நிலையம், ஸ்பா ஆகியவையும் இதனுள் இருக்கிறது. நூலகம், மல்டிபர்பஸ் ஹால், இன்டோர் கேம்ஸ் ரூம், ஏ.டி.எம்., சேப்டி லாக்கர், 24 மணிநேரம் மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஜெனரேட்டர் என, அனைத்துமே ZIVA-வுக்குள் இருக்கின்றன.
நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் நம்மை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை கொஞ்சி விளையாடும் இடத்தில், நம் பெற்றோர்களாவது சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் தங்களின் ஓய்வு நாட்களைகழிக்கட்டும் என நினைப்பவர்களுக்கு, ZIVA பெஸ்ட் சாய்ஸ்.
ZIVAவில் வீடு வாங்குங்க; அதில் நம் பெரியவர்கள் வாழ்வாங்கு வாழட்டும்!

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)