பதிவு செய்த நாள்
12 மே2018
00:22

திருப்பூர்:ஜி.எஸ்.டி.,யை நடைமுறைப்படுத்த ஏதுவாக, மறு சீரமைப்பு பணிகளை துவக்கியுள்ளது, தமிழக வணிக வரித்துறை. இதற்காக, 11 அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.,யை மத்திய கலால் வரி, மாநில வணிக வரித்துறை நிர்வகிக்கின்றன. ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் முன்னரே, கலால் வரித் துறை, துறை சார்ந்த மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.தமிழக வணிக வரித்துறையோ, எவ்வித மறு சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
வணிக வரித்துறை, தமிழகம் முழுவதும், 310 சரகம்; 10 வரி விதிப்பு மண்டலம்; எட்டு, செயலாக்க மண்டலங்களை கொண்டுள்ளது.ஊழியர் பற்றாக்குறையால், வர்த்தகர்களை கண்காணிப்பது, வரி நடைமுறைகளை முழுமையாக செயல்படுத்துவது சிக்கலாகி வருகிறது.வணிக வரித்துறை, தற்போது சீரமைப்பு பணியை துவக்கியுள்ளது. இதற்காக, 11 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கமிட்டியையும் அமைத்துள்ளது.
வணிக வரித்துறை சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர், ரவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியில், ஐந்து இணை கமிஷனர்கள்; இரண்டு துணை கமிஷனர்கள்; ஒரு உதவி கமிஷனர் மற்றும் இரண்டு துணை வணிக வரி அலுவலர்கள், உறுப்பினராக உள்ளனர்; ஒரு சிறப்பு உறுப்பினரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மண்டல வணிக வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘1,500 வர்த்தகர்கள் கொண்டது, ஒரு சரகமாக பிரிக்கப்பட்டு, மொத்த சரக எண்ணிக்கை, 400 ஆக உயர்த்தப்பட வேண்டும்.‘ஜி.எஸ்.டி., என்கிற ஒரே வரியைத் தான், மத்திய மற்றும் மாநில வரித் துறைகள் செயல்படுத்துகின்றன. எனவே, கலால் வரித் துறைக்கு இணையான அதிகார பலம், வணிக வரித் துறைக்கு தேவைப்படுகிறது’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|