பதிவு செய்த நாள்
12 மே2018
00:26

கோல்கட்டா:‘‘இந்தியாவில், தொழில் முனைவோரின் முயற்சிகளில், 95 சதவீதம் தோல்வியில் முடிகின்றன,’’ என, ‘நிடி ஆயோக்’ உறுப்பினர், பிபேக் தெப்ராய் தெரிவித்துள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது:
பிரதமரின், ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’ உள்ளிட்ட தொழில்முனைவு திட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது அல்ல; ஒவ்வொரு இந்தியனும் வளம் பெற்று, செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அமலாகியுள்ளன.ஆனால், தொழில் புரிவதில், 95 சதவீதம் தோல்வி அடையும்போது, நம் கல்வித் திட்டம், தொழில் முனைவு குறித்து சரியாக போதிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
நம் கல்வி முறை, கேள்வி கேட்க வேண்டும் என்ற உணர்வை, மாணவர்களிடம் ஏற்படுத்துவது இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, சிறு விவசாயிகள், சாதாரண கடைத் தெரு வியாபாரிகளிடம், எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதற்கான அறிவும், ஆற்றலும் அதிகம் உள்ளது.
இந்தியாவில், தனி நபர் வருவாய், ஆண்டுக்கு 1,800 டாலராக உள்ளது. இது, முன்னேறிய நாடுகளை விட, மிகக் குறைவாகும்.கடந்த, 1991ல் தாராளமயமாக்கல் கொள்கை அமலானபோது, முன்னேறிய நாடுகளுக்கு நிகராக இந்தியாவின் தனி நபர் வருவாய் உயர, 150 ஆண்டுகள் ஆகும் என, சர்வதேச நிதியம், கணித்தது. ஆனால், அவ்வளவு காலம் காத்திருக்க தேவையில்லை என, கடந்த, 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி புலப்படுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|