பதிவு செய்த நாள்
12 மே2018
00:28

பி.எஸ்.என்.எல்.,லுக்கு, ‘4ஜி’ அலைக்கற்றை ஒதுக்க, மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஒப்புதல் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
பொது துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையில் இதுவரை ஈடுபடவில்லை. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.இது குறித்து, தமிழ்நாடு, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கத் தலைவர், செல்லப்பா கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையில் ஈடுபட, தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. 4ஜி அலைக்கற்றை பெற, 16 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், பி.எஸ்.என்.எல்., உள்ளது.
இதற்கு, 8,000 கோடி ரூபாயை முதலீட்டு நிதியில் சேர்த்துக் கொள்ளவும், மீதம் உள்ள, 8,000 கோடி ரூபாயை, 10 தவணைகளில் செலுத்துவதாகவும் நாங்கள் உறுதி அளித்தோம். நீண்ட பேச்சுக்குப் பின், பிப்., மாதத்தில் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் இதற்கு ஒப்புக் கொண்டார்.
ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. 4ஜி அலைக்கற்றை ஒதுக்குவதற்கான செயல்பாடுகள் மிகவும் தாமதமாக உள்ளன. அதனால், மத்திய அமைச்சரை மீண்டும் சந்தித்து பேச உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|