ஆர்ஜியோ விலை குறைப்பு ஏர்டெல், ஐடியா பாதிப்புஆர்ஜியோ விலை குறைப்பு ஏர்டெல், ஐடியா பாதிப்பு ... தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­கு­வதை தவிர்ப்­பது எப்­படி? தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­கு­வதை தவிர்ப்­பது எப்­படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘பிளிப்கார்ட்’ புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ளும் ‘வால்மார்ட்’ நிறுவனம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2018
00:12

மும்பை:‘பிளிப்­கார்ட் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கும்’ என, அந்­நி­று­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­தும், ‘வால்­மார்ட்’ நிறு­வ­னம், அமெ­ரிக்க பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பிற்கு தெரி­வித்­து உள்­ளது.
அமெ­ரிக்­கா­வின், ஆர்­கன்­சாஸ் மாகா­ணத்­தில், பென்­டன்­வில்லி நக­ரில் தலை­மை­ய­கத்தை கொண்­டுள்ள வால்­மார்ட் நிறு­வ­னம், சில்­லரை விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், வலை­த­ளம் வாயி­லான சில்­லரை விற்­ப­னை­யி­லும் கள­மி­றங்க உள்­ளது.இதற்­காக, பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தின், 77 சத­வீத பங்­கு­களை, 1.12 லட்­சம் கோடி ரூபாய் வாங்­கு­வ­தாக, சில தினங்­க­ளுக்கு முன் அறி­வித்­தது.
இந்த கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை குறித்து, அமெ­ரிக்க பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­திடம், வால்­மார்ட் அறிக்கை அளித்­துள்­ளது. அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:பிளிப்­கார்ட் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் முடி­வ­டைந்த பின், நான்கு ஆண்­டு­க­ளுக்­குள், அந்­நி­று­வ­னம் புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கும்.
இந்த பங்கு வெளி­யீடு, தற்­போது, பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில் மேற்­கொள்­ளும் முத­லீட்டு மதிப்­பிற்கு, குறை­யா­மல் இருக்­கும்.வால்­மார்ட் சார்­பில், பிளிப்­கார்ட் நிறு­வன இயக்­கு­னர் குழு­வில், ஐந்து பேர் நிய­மிக்­கப்­ப­டு­வர். வருங்­கா­லத்­தில், பெரும்­பான்மை இயக்­கு­னர்­கள் ஆத­ர­வு­டன், மேலும் ஒரு இயக்­கு­னர் நிய­மிக்­கப்­ப­ட­லாம். சிறு­பான்மை பங்­கு­களை வைத்­துள்­ளோர் தரப்­பில், இரண்டு இயக்­கு­னர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர். அவர்­களில், பிளிப்­கார்ட் நிறு­வ­னர், பின்னி பன்­சால், ஒரு இயக்­கு­ன­ராக இருப்­பார்.
பின்னி பன்­சால் மற்­றும் இயக்­கு­னர் குழு­வின் ஆலோ­ச­னைப்­படி, பிளிப்­கார்ட் நிறு­வன தலைமை செயல் அதி­காரி மற்­றும் இதர முக்­கிய பொறுப்­பு­களில் உள்­ளோரை நிய­மிக்­கவோ அல்­லது மாற்­ற வோ, வால்­மார்ட்­டுக்கு அதி­கா­ரம் உள்­ளது.கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் முடி­வ­தற்கு முன் அல்­லது ஓராண்­டிற்­குள்ளோ, 300 கோடி டாலர் மதிப்­பிற்கு சாதா­ரண பங்­கு­களை வெளி­யி­டு­மாறு, பிளிப்­கார்ட் நிறு­வ­னம் கேட்­டுக் கொள்­ளப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
11 ஆண்டுகளில்...
வால்­மார்ட் நிறு­வ­னம், பிளிப்­கார்ட் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­வ­தாக அறி­வித்த போதி­லும், சந்தை போட்டி கண்­கா­ணிப்பு அமைப்பு அனு­மதி அளித்­தால் தான், இணைப்பு நட­வ­டிக்கை செயல்­பாட்­டிற்கு வரும்.கடந்த, 2007ல், சச்­சின் பன்­சால், பின்னி பன்­சால் ஆகி­யோர் இணைந்து, நான்கு லட்­சம் ரூபாய் முத­லீட்­டில், பிளிப்­கார்ட் நிறு­வ­னத்தை தோற்­று­வித்­த­னர். இந்­நி­று­வ­னம், 11 ஆண்­டு­களில், 1.47 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள நிறு­வ­ன­மாக உயர்ந்­துள்­ளது.
முப்பதாயி­ரம் பணி­யா­ளர்­க­ளு­டன், ஆண்­டுக்கு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரு­வாய் ஈட்­டி­னா­லும், இந்­நி­று­வ­னம் தொடர்ந்து இழப்பை சந்­தித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.
பின்வாங்குகிறது
பிளிப்­கார்ட்­டில் கொண்­டுள்ள, 22 சத­வீத பங்­கு­களை, வால்­மார்ட் நிறு­வ­னத்­திற்கு விற்க, ‘சாப்ட்­பேங்க்’ தயங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. இந்­நி­று­வ­னம், பிளிப்­கார்ட்­டில், 250 கோடி டாலர் முத­லீடு செய்து வாங்­கிய பங்­கு­களை, 9 மாதங்­களில், 450 கோடி டால­ருக்கு, வால்­மார்ட்­டுக்கு விற்­பனை செய்ய முன்­வந்­தது. எனி­னும், வரி பிரச்னை, பங்கு விலை மேலும் உய­ரும் என்ற எதிர்­பார்ப்பு போன்­ற­வற்­றால் பின்­வாங்­கு­வ­தாக தெரி­கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)