ஆர்ஜியோ விலை குறைப்பு ஏர்டெல், ஐடியா பாதிப்புஆர்ஜியோ விலை குறைப்பு ஏர்டெல், ஐடியா பாதிப்பு ... ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம் ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம் ...
தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­கு­வதை தவிர்ப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
00:20

அதிக அளவில் சேமிக்க முடி­யாமல் போவ­தற்கு, வரை­முறை இல்­லாத செல­வு­களே முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. செல­வு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் எனில், தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­கு­வதை, கைவிட வேண்டும். ஏனெனில், தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­கு­வதன் வாயிலாக, சேமிப்­ப­தற்­கான தொகை குறை­வ­தோடு, பணத்தின் பொரு­ளா­தார ஆற்­றலும் முடங்கி விடு­கி­றது. இதை தவிர்ப்­ப­தற்­கான வழிகள்:
எது முக்­கியம்
வீண் செல­வு­களை தவிர்க்க, முதலில் செய்ய வேண்­டி­யது எது முக்­கியம் என்­பதை அறிந்­தி­ருப்­ப­தாகும். உங்­க­ளுக்கு எவை எல்லாம் முக்­கியம் என்­பது தெளி­வாக தெரிந்­தி­ருந்தால், அதற்­கேற்ப செல­வு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கலாம். அத்­தி­யா­வ­சிய பொருட்கள் முக்­கி­ய­மா­னவை, ஆனால் வார இறுதி பொழு­து­போக்கு கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­யது.
பட்ஜெட் தேவை
தேவை­யில்­லாத பொருட்­களை வாங்­கு­வ­தற்கு முக்­கிய காரணம் பட்ஜெட் போடாமல் செலவு செய்­வ­தாகும். மாதாந்­திர பட்­ஜெட்டை வகுத்து அதற்­கேற்ப செலவு செய்தால் வீண் செல­வு­களை எளி­தாக தவிர்க்­கலாம். கடி­ன­ மாக உழைத்து சம்­பா­தித்த பணத்தை, எப்­படி செல­விட வேண்டும் என திட்­டமும், ஒழுங்கும் அவ­சியம்.
ரொக்கம் மட்டும்
கிரெடிட் கார்டில் பொருட்­களை வாங்­கு­வது மிகவும் வச­தி­யா­னது. ஆனால் இதன் கார­ண­மா­கவே ஆசைப்­பட்ட பொருட்­களை எல்லாம் வாங்கும் நிலை இருக்­கலாம். எனவே எல்­லா­வற்­றுக்கும் கிரெடிட் கார்டை பயன்­ப­டுத்­தாமல், ரொக்­க­மாக கொடுத்து வாங்கும் பழக்­கத்தை வைத்­துக்­கொள்ள வேண்டும். பொருட்­களின் தேவைக்­கேற்ப, ரொக்­கத்தை வைத்­துக்­கொள்ள வேண்டும்.
தாமதம் நல்­லது
எந்த பொரு­ளையும் நினைத்­த­வுடன் வாங்­கி­வி­டாமல், தள்­ளிப்­போட வேண்டும். இடைப்­பட்ட காலத்தில், அந்த பொருள் தேவை தானா என, யோசிக்க வேண்டும். புதிய போன் அல்­லது புதிய ஆடை போன்­ற­வற்­றுக்கு இது பொருந்தும். ஒரு வாரம் காலம் காத்­தி­ருப்­பது எனும் உத்­தி­யையும் கடைப்­பி­டிக்­கலாம். ஒரு வாரம் ஆன பின்னும் அந்த பொருள் தேவை என நினைத்தால் வாங்­கலாம்.
உங்கள் தேவை
பெரும்­பா­லானோர், மற்­ற­வர்கள் மத்­தியில் நல்­ல­வி­த­மாக தோன்ற வேண்டும் என்­ப­தற்­கா­கவே, பல பொருட்­களை வாங்­கு­கின்­றனர். ஆனால், மற்­ற­வர்கள் நினைப்­பதை மறந்­து­விட்டு, உங்­க­ளுக்கு தேவையா என்­ப­தையே மனதில் கொள்ள வேண்டும். மற்­ற­வர்கள் உயர்­வாக நினைக்க வேண்டும் என்­ப­தற்­காக, எந்த பொரு­ளையும் வாங்க வேண்டாம். உங்கள் நிதி நலனே முக்­கியம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)