ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம்ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம் ...  பங்குச்சந்தை  சந்தை மதிப்பை உணர்ந்த வால்­மார்ட் பங்குச்சந்தை சந்தை மதிப்பை உணர்ந்த வால்­மார்ட் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முத­லீட்டில்கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
00:26

பங்­குச்­சந்தை முத­லீட்டில் பலன பெற விரும்­பு­கி­ற­வர்கள், தங்­களால் கட்­டுப்­ப­டுத்­தக்­கூடிய அம்­சங்­களில், அதிகம் கவனம் செலுத்­து­வது சரி­யான உத்­தி­யாக அமையும்.
பங்­குச்­சந்­தையில் முத­லீடு செய்ய ஏற்ற நேரம் எது?, அதிக லாபம் அளிக்­க­கூ­டிய பங்­கு­களை எப்­படி அடை­யாளம் கண்டு வாங்­கு­வது? போன்ற கேள்­விகள் சம­பங்கு முத­லீட்டில் ஆர்வம் உள்­ள­வர்­களால் அடிக்­கடி கேட்­கப்­படும் கேள்­வி­க­ளாக இருக்­கின்­றன.பங்­குச்­சந்தை போக்கை வெற்­றி­ க­ர­மாக கணித்து அத­ன­டிப்­ப­டையில் முத­லீடு செய்து லாபம் பார்க்க முடியும் என்ற எண்­ணத்தின் அடிப்­ப­டையில் இந்த கேள்­விகள் அமை­கின்­றன. சந்­தையின் போக்கு அல்­லது குறிப்­பிட்ட பங்­கு­களின் போக்கை சரி­யாக கணிக்க முடியும் எனும் நம்­பிக்­கையில் பங்கு சந்­தையை அணு­கு­வதும் பழக்­க­மாக இருக்­கி­றது.
ஆனால், பங்­குச்­சந்­தையின் போக்கை கணிப்­பது என்­பது மிகவும் சிக்­க­லா­னது. அதை எல்லா நேரங்­க­ளிலும் வெற்­றி­க­ர­மாக செய்­வது சாத்­தி­ய­மில்லை. அதிலும் தொடர்ந்து நிகழ்த்­து­வது என்­பது சாத்­தியம் இல்லை. பங்­குச்­சந்­தையின் போக்கு ஏற்ற இறக்­கத்­திற்கு உள்­ளாகும் என்பது இயல்­பா­னது.
இதற்கு பல­வித கார­ணங்கள் இருக்­கின்­றன. இதை கணிக்க முடியும் எனும் நம்­பிக்­கையும், அதன் அடிப்­ப­டையில் பங்­குகள் உயரும் போது முத­லீடு செய்­வது நல்ல பல­னைத்­தரும் என்­பதும் ஒரு முத­லீட்டு உத்­தி­யாக அமை­கி­றது. இத்­த­கைய முத­லீட்­டா­ளர்கள் சந்தை சரியும் போது விலகி நிற்கும் தன்­மை­யையும் பெற்­றுள்­ளனர்.
யூகத்தின் தாக்கம்
பங்­குச்­சந்தை முத­லீடு அதிக பலன் தரக்­கூ­டிய என்­றாலும், அது நீண்ட கால நோக்­கி­லா­னது எனும் அடிப்­ப­டையை நினைவில் கொள்ள வேண்டும். அதற்­கேற்ப ஒரு­வரின் முத­லீட்டு உத்தி அதா­வது பங்­கு­களை வாங்­கு­வது என்­பது, நிதி இலக்­கிற்கு ஏற்ப அமைய வேண்டும். மாறாக குறு­கிய கால பலனை கருத்தில் கொண்டு, கணிப்பின் அடிப்­ப­டையில் முத­லீடு செய்தால், எதிர்­பார்த்த பலனை பெற முடி­யாது.
தனி பங்­கு­களின் போக்கும் சரி, மொத்­த­மாக சந்­தையின் போக்கும் சரி, எண்­ணற்ற கார­ணங்­களால் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றன. மேலும் சந்­தையின் போக்கும் தனி பங்­கு­களின் போக்கும் கூட, மாறு­பட்­ட­தாக அமை­யலாம். உதா­ர­ணத்­திற்கு சரியும் சந்­தையில் ஏற்றம் கண்ட பங்­குகள் இருக்­கலாம். எனவே தான் யூகத்தின் அடிப்­ப­டை­யி­லான முத­லீடு ஏற்­ற­தல்ல என கரு­தப்­ப­டு­கி­றது.
பொது­வா­கவே திட்­ட­மிட்ட முத­லீட்டை மேற்­கொள்­வ­தாக இருந்தால், எல்லா நேரமும் சரி­யான நேரமே என்று கரு­தப்­ப­டு­கி­றது. ஒருவர் தனது தேவையின் அடிப்­ப­டையில் நேர­டி­யாக அல்­லது முறை­மு­க­மாக பங்­கு­களில் முத­லீடு செய்­து­விட்டு காத்­தி­ருந்தால், அந்த முத­லீடு உரிய பலனை அளிக்கும் வாய்ப்பு உள்­ளது.
எனவே தான், பங்கு முத­லீட்டில் தங்­களால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அம்­சங்கள் பற்றி, முத­லீட்­டா­ளர்கள் அதிகம் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை என்­கின்­றனர்.
பங்­குகளின் விலை
இதற்கு மாறாக, எந்த பங்கை வாங்­கு­வது? எவ்­வ­ளவு வாங்­கு­வது மற்றும் எந்த விலையில் வாங்­கு­வது? உள்­ளிட்ட அம்­சங்கள் முத­லீட்­டா­ளர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் உள்­ளவை. நிறு­வன வர்த்­த­கத்தின் தன்மை, அதன் லாபம் மீட்டும் தன்மை, அதன் போட்டி சூழல் ஆகிய அம்­சங்­களின் அடிப்­ப­டையில், எந்த நிறு­வன பங்­கு­களை வாங்­கலாம் என முடிவு செய்­யலாம்.நல்ல பங்கு என்­றாலும், ஒரே நிறு­வன பங்­கு­களை அதிக அளவில் வாங்­கு­வது ரிஸ்­காக அமையும். எனவே எந்த அளவு பங்­கு­களை வாங்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்க வேண்டும். பர­வ­லாக்கம் நல்ல உத்தி. அதே போல, எந்த விலையில் வாங்­கலாம் என்­ப­தையும் முத­லீட்­டாளர் தீர்­மா­னிக்­கலாம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)