மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ மோசடி நடைபெற வாய்ப்புமாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ மோசடி நடைபெற வாய்ப்பு ... ‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’  சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை ‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’ சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை ...
3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
00:49

நியூயார்க்:‘இந்­தி­யா­வில், மரபு சாரா எரி­சக்தி துறை­யில், அடுத்த, நான்கு ஆண்­டு­களில், மூன்று லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்’ என, ஐ.நா., சர்­வ­தேச தொழி­லா­ளர் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள, ‘பசுமை குடில்­கள் சார்ந்த, சர்­வ­தேச வேலை­வாய்ப்பு மற்­றும் சமூக பார்வை’ என்ற ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:இந்­தியா, 2022ல், மரபு சாரா எரி­சக்தி மூலம், 175 கிகா வாட் மின் உற்­பத்தி மேற்­கொள்ள இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.
இந்த இலக்கை எட்ட, சூரிய சக்தி மற்­றும் காற்­றாலை மின் உற்­பத்தி நிறு­வ­னங்­களில், பல்­வேறு நிலை­களில் பணி­யாற்ற, மூன்று லட்­சத்­திற்­கும் அதி­க­மா­னோர் தேவைப்­ப­டு­வர்.கீழ் தளம் மற்­றும் கூரை­களில் அமைக்­கப்­படும் சூரிய மின்­சக்தி சாத­னங்­கள் மற்­றும் காற்­றாலை திட்­டங்­க­ளுக்­கான வல்­லு­னர்­களின் தேவை­யும் அதி­கம் இருக்­கும்.
எனி­னும், இந்த தேவைப்­பாடு, சூரிய மின்­சக்தி உற்­பத்­திக்­கான மூலக்­கூறு சாத­னங்­களை எந்த அள­விற்கு தயா­ரிக்க முடி­யும் என்­பதை பொறுத்து உள்­ளது. இத்­த­கைய சாத­னங்­களை தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­களின் உற்­பத்தி திறன் உயர்த்­தப்­பட வேண்­டும்.அத்­து­டன், மரபு சாரா எரி­சக்தி துறை­யில் பணி­பு­ரி­வ­தற்­கான தொழிற் பயிற்சி திட்­டங்­களை அமல்­ப­டுத்த வேண்­டும். நடை­மு­றை­யில் உள்ள, சூரிய மின்­சக்தி, காற்­றாலை மின்­சக்தி ஆகி­ய­வற்­றுக்­கான பயிற்சி திட்­டங்­களை விரி­வு­ப­டுத்த வேண்­டும்.
மத்­திய அரசு, 2012 – -17ம் ஐந்­தாண்டு திட்­டத்­தில், சுற்­றுச்­சூ­ழல் மேம்­பாட்­டிற்கு முக்­கி­யத்­து­வம் அளித்­துள்­ளது. அதன்­படி, தேசிய அள­வில் பசுமை எரி­சக்­திக்­கான திறன் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்­கான நடை­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்­டன.அவற்­றின் அடிப்­ப­டை­யில், 2015ல், பசு­மை­க்கு­டில் சார்ந்த வேலை­வாய்ப்­பு­க­ளுக்­கான திறன் பயிற்சி கவுன்­சில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.இக்­க­வுன்­சில் வழி­காட்­டு­தல்­படி, நீர் மேலாண்மை திட்ட உத­வி­யா­ளர் முதல், சூரிய மின்­சக்தி திட்ட மேலா­ளர் வரை­யி­லான வேலை­க­ளுக்கு, 26 புதிய தொழில்­நுட்­பம் மற்­றும் தொழிற்­ப­யிற்சி கல்வி திட்­டங்­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்ளன.
இந்­தியா, மர­பு­சாரா எரி­சக்தி துறை­யின் பங்­க­ளிப்பை அதி­க­ரித்து வரு­கிறது. இருந்­த­போ­தி­லும், மின் உற்­பத்­தி­யில், 80 சத­வீ­தத்தை, அதிக மாசு உண்­டாக்­கும், நிலக்­கரி, டீசல், இயற்கை எரி­வாயு உள்­ளிட்ட எரி­பொ­ருள்­களை சார்ந்து உள்­ளது.
இத்­த­கைய எரி­பொ­ருள்­களில் இருந்து, சூரிய மின்­சக்தி, காற்­றாலை போன்ற, பசுமை குடில் சார்ந்த பொரு­ளா­தா­ரத்­தில் மாறும்­போது, பல்­வேறு துறை­களில், 60 லட்­சம் பேர் வேலை­யி­ழக்­கும் அபா­ய­மும் உள்­ளது.குறிப்­பாக, பெட்­ரோ­லி­யம் உற்­பத்தி மற்­றும் சுத்­தி­ க­ரிப்பு துறை­களில், 10 லட்­சத்­திற்கு மேற்­பட்­டோர் பணி இழப்­பிற்கு உள்­ளா­வர் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
முதலிடம்
மரபு சாரா எரி­சக்தி மூலம், மின்­சார கார் முதல் பசுமை கட்­ட­டங்­கள் வரை, பல்­வேறு திட்­டங்­களில், அரசு மற்­றும் தனி­யார் முத­லீ­டு­கள் அதி­க­ரித்து வரு­கின்றன. இந்த முத­லீ­டு­கள் மூலம் அதிக வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­ய­தில், ஆசிய – பசு­பிக் பிராந்­திய நாடு­கள் முத­லி­டத்­தில் உள்ளன. இங்கு, 1.40 கோடி வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கி­யுள்ளன. இது, அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பா­வில், முறையே, 30 லட்­சம் மற்­றும் 20 லட்­சம் என்ற அள­வில் உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான ... மேலும்
business news
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது ... மேலும்
business news
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ ... மேலும்
business news
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)