3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு மதிப்பீடு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு ...
‘2019 பொது தேர்தலில் மோடி வெல்வார்’ சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
00:50

புதுடில்லி:சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள், 2019, பொதுத் தேர்­த­லில், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான, பா.ஜ., மீண்­டும் வென்று ஆட்­சியை தக்க வைக்­கும் என, நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­தாக, சீனா­வைச் சேர்ந்த, யு.பி.எஸ்., செக்­யூ­ரிட்­டீஸ் நிறு­வ­னம் கூறி­யுள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் இந்­திய ஆய்வு பிரிவு தலை­வர் கவு­தம் சாச்­ச­ரியா மற்­றும் ஆய்­வா­ளர் சன்­ஜனா தாதா­வாலா ஆகி­யோர் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் பல­ரு­டன் ஆலோ­சனை நடத்­தி­னோம். அவர்­கள், ‘2019 பொது தேர்­த­லில், மோடி வெல்­வார்’ என, நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.
அந்த நம்­பிக்­கை­யா­லும், பங்­குச் சந்தை எழுச்­சி­யு­டன் உள்­ள­தா­லும், பங்­கு­களில் முத­லீடு செய்­வ­தாக, அவர்­கள் கூறி­னர்.மத்­திய அர­சும், பொது தேர்­தலை சந்­திக்க, கிரா­மப்­பு­றங்­களை குறி­வைத்து, பல்­வேறு ஊக்­கச் சலுகை திட்­டங்­களை பரி­சீ­லிக்­கும் என, தெரி­கிறது.உதா­ர­ண­மாக, மத்­திய பிர­தே­சத்தை பின்­பற்றி, விவ­சாய பொருட்­களின் உற்­பத்­திச் செல­வுக்­கும், விற்­பனை விலைக்­கும் உள்ள வித்­தி­யா­சத்தை, விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கும் திட்­டத்தை, அமல்­ப­டுத்­த­லாம்.
விளை பொருட்­களின் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை உயர்த்­த­லாம். தெலுங்­கா­னாவை போல, விவ­சா­யி­க­ளுக்கு நிதி­யு­தவி அளிக்­க­லாம்.அத்­து­டன், விவ­சா­யி­க­ளுக்கு, பூஜ்ய வட்­டி­யில் கடன், வட்டி மானி­யம் உள்­ளிட்ட திட்­டங்­க­ளை­யும், பரி­சீ­லிக்­க­லாம்.
பிர­த­மர் மோடி­யின், ஆட்­சி­யில், முதல், மூன்­றரை ஆண்­டு­கள், ஏரா­ள­மான சீர்­தி­ருத்­தங்­களும், பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி., திவால் சட்­டம் போன்ற, கடு­மை­யான அர­சி­யல் நிலைப்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.அடுத்து, பொது தேர்­தல் வர உள்­ள­தால், இனி இது­போன்ற பெரிய நட­வ­டிக்­கை­கள் எதை­யும், மத்­திய அரசு மேற்­கொள்­ளாது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
பொது தேர்­தலை முன்­னிட்டு, மத்­திய அரசு எடுக்­கும், அர­சி­யல் சார்ந்த பொரு­ளா­தார நிலைப்­பாடு, நடை­மு­றைக்கு வந்­தா­லும் அல்­லது பேச்­ச­ள­வில் நின்­றா­லும், பங்­குச் சந்தை எழுச்­சிக்கு உத­வும். கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரம் சார்ந்த பங்­கு­க­ளுக்­கும் வர­வேற்பு அதி­க­ரிக்­கும். மத்­திய அர­சின் கொள்­கை­கள் வெற்றி பெற்­றால், வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­வது அதி­க­ரிக்­கும்.
யு.பி.எஸ்., செக்­யூ­ரிட்­டீஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)