ஆயத்த ஆடை ஏற்றுமதி 21.40 சதவீதம் சரிவுஆயத்த ஆடை ஏற்றுமதி 21.40 சதவீதம் சரிவு ... தர்மபுரி பட்டுக்கூடு அங்காடி சாதனை தர்மபுரி பட்டுக்கூடு அங்காடி சாதனை ...
நுால் ஏற்றுமதி ரூ.885 கோடி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:32

கோவை : கடந்த ஏப்­ர­லில் நுால், துணி வகை­கள் மற்­றும் வீட்டு உப­யோக ஜவு­ளிப் பொருட்­கள் ஏற்­று­மதி, 885 கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், இந்­திய ஜவு­ளித்­துறை தொடர்ந்து ஏறு­மு­கத்­தில் உள்­ளது.

நேற்று முன்­தி­னம், மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம், ஏற்­று­மதி விப­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளது. அதில், 2017 ஏப்­ர­லில் நுால், துணி மற்­றும் வீட்டு உப­யோக ஜவு­ளிப் பொருட்­கள் ஏற்­று­மதி, 4,999 கோடி ரூபா­யாக இருந்­தது. இந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில், 5,884 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. ஏற்­று­மதி வளர்ச்சி, 17.69 சத­வீ­தம் என கூறப்­பட்­டுள்­ளது.

சுணக்கம் :
செயற்கை நுால் வகை­க­ளான, ‘பாலி­யஸ்­டர், விஸ்­கோஸ்’ போன்­ற­வற்­றின் ஏற்­று­மதி, 2017 ஏப்­ர­லில், 2,629 கோடி­யாக இருந்­தது, 2018 ஏப்­ர­லில், 2,743 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து, 4.35 சத­வீத வளர்ச்­சியை எட்­டி­இ­ருக்­கிறது. அதே­நே­ரத்­தில், ஆயத்த ஆடை­கள் ஏற்­று­மதி, 2017 ஏப்­ர­லில், 11 ஆயி­ரத்து, 272 கோடி­யாக இருந்­தது; 2018 ஏப்­ர­லில், 8,859 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.

நுால் மற்­றும் செயற்கை நுாலிழை ஏற்­று­மதி உயர்­வுக்கு, உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு தேவை அதி­க­ரிப்பு தான் பிர­தான கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது. ஆனால், கடந்த நான்கு மாதங்­க­ளாக தொடர்ந்து, ஆயத்த ஆடை துறை சரி­வில் இருக்­கிறது. இந்த சுணக்­கம் தொட­ரும் என்றே ஜவு­ளித் துறை­யி­னர் அஞ்­சு­கின்­ற­னர்.

போட்டி :
இதற்கு வியட்­னாம், சீனா மற்­றும் வங்­க­தே­சத்­தின் கடும் போட்­டியே கார­ணம். அந்­நா­டு­க­ளுக்கு சர்­வ­தேச சந்­தை­யில் இறக்­கு­மதி வரி கிடை­யாது என்­பது கூடு­தல் சாத­க­மாக இருப்­ப­தால், இந்­திய ஜவு­ளித் துறை தள்­ளா­டு­கிறது. எனவே, அரசு இத்­து­றைக்கு குறு­கிய கால சலு­கை­களை அளிப்­பது, புதிய சந்தை வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது மற்­றும் உற்­பத்தி திற­னில் கவ­னம் செலுத்­து­வது, நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது போன்ற தீர்­வு­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்றன. ஏனெ­னில், சிறு, குறு முத­லீட்­டில் அதி­க­மா­னோ­ருக்கு வேலை வாய்ப்பு அளிப்­பது ஜவு­ளித் துறை­யா­கும்.

‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ் அசோ­சி­யே­ஷன்’ ஒருங்­கி­ணைப்­பா­ளர் பிரபு தாமோ­த­ரன் கூறு­கை­யில், ‘‘உள்­நாட்டு நுால் தேவை, வெளி­நாட்டு ஏற்­று­மதி ஆர்­டர்­கள் தொடர்ந்து நல்ல நிலை­யில் இருப்­ப­தால், நுால், துணி வகை­கள் மற்­றும் வீட்டு உப­யோக ஜவு­ளிப் பொருட்­களின் ஏற்­று­மதி தொடர்ந்து அதி­க­ரிக்­கும். ‘‘நுால் விலை­யும் தொடர்ந்து நிலை­யா­க­வும் ஏறு­மு­கத்­தி­லும் இருப்­பது, இந்­திய ஜவு­ளித் துறைக்கு நல்ல செய்­தி­யா­கும்,’’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)