பதிவு செய்த நாள்
17 மே2018
01:33
தர்மபுரி : தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், 15 நாட்களில் மட்டும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பட்டு வர்த்தகம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்துக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பட்டுக்கூடுகள் கொண்டு வருகின்றனர். கடந்த, 15 நாட்களில் மட்டும், மஞ்சள் பட்டுக்கூடு, 5,310 கிலோ; வெள்ளை பட்டுக்கூடு, 23 ஆயிரத்து, 326 கிலோ என மொத்தம், 28 ஆயிரத்து, 636 கிலோ பட்டுக்கூடுகள் ஏலம் விடப்பட்டன. இதன் மொத்த தொகை, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து, 76 ரூபாய். கோடை வெயிலின் தாக்கத்தால் மஞ்சள் பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|