‘பார்டிசிபேட்டரி நோட்’ முதலீடு; ரூ.1 லட்சம் கோடியாக சரிவு‘பார்டிசிபேட்டரி நோட்’ முதலீடு; ரூ.1 லட்சம் கோடியாக சரிவு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.70 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.70 ...
11 மாநிலங்களில் ஜி.எஸ்.டி., வசூல் குறைவு; காரணம் அறிய மத்திய அரசு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:39

புது­டில்லி : ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி வசூல், 11 மாநி­லங்­களில் மிக­வும் குறை­வாக உள்­ளது குறித்து ஆய்வு செய்து, உரிய தீர்வு காண, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

கடந்த, 2017, ஜூலை 1ல், நாடு முழு­வ­தும், புதிய வரி விதிப்­பான, ஜி.எஸ்.டி., அம­லுக்கு வந்­தது. முந்­தைய வரி விதிப்­பில் இருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறு­வ­தால், மாநி­லங்­க­ளுக்கு ஏற்­படும் வரி வரு­வாய் இழப்­பிற்கு, மத்­திய அரசு இழப்­பீடு வழங்­கு­கிறது.

கூடுதல் வரி :
இதற்­காக, ஆடம்­பர பொருட்­கள், சிக­ரெட், கார் போன்­ற­வற்­றுக்கு, அதி­க­பட்­ச­மாக நிர்­ண­யித்­துள்ள, 28 சத­வீத ஜி.எஸ்.டி., உடன், கூடு­தல் வரி­கள் வசூ­லிக்­கப்­ப­டு­கின்றன. இவ்­வாறு வசூ­லிக்­கப்­பட்ட, 41 ஆயி­ரத்து, 147 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்­பீ­டாக, மாநில அர­சு­க­ளுக்கு கடந்த நிதி­யாண்­டில் வழங்­கப்­பட்­டது. இதன் மூலம், மாநி­லங்­களின் வரி வரு­வாய் பற்­றாக்­குறை, படிப்­ப­டி­யாக குறைந்து, கடந்த நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, சரா­ச­ரி­யாக, 17 சத­வீ­தம் என்ற அள­விற்கு குறைந்­துள்­ளது.

இருந்­த­போ­தி­லும், இந்­தாண்டு, பிப்­ர­வரி நில­வ­ரப்­படி, 11 மாநி­லங்­கள், அதி­க­பட்ச வரி வரு­வாய் இழப்பை சந்­தித்­துள்ளன. இதில், இமாச்­சல பிர­தே­சத்­தின் வரி வரு­வாய் பற்­றாக்­குறை, 50 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது. இந்த பற்­றாக்­குறை, பஞ்­சாப், உத்­த­ர­கண்ட், பீஹார் மாநி­லங்­களில், தலா, 40 சத­வீ­த­மாக உள்ளன. ஒடிசா, சத்­தீஸ்­கர் மாநி­லங்­கள், தலா, 30 சத­வீ­தம் வரி வரு­வாய் பற்­றாக்­கு­றையை சந்­தித்­துள்ளன. இது, மத்­திய பிர­தே­சத்­தில், 28 சத­வீ­த­மா­க­வும், அசாம், ஜார்க்­கண்ட், திரி­புரா, ஜம்மு – காஷ்­மீர் மற்­றும் புதுச்­சே­ரி­யில், தலா, 20 சத­வீ­த­மாகவும் உள்ளன.

தீர்வு :
இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: இம்­மா­தம், 4ம் தேதி நடை­பெற்ற, 27வது, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், ஜி.எஸ்.டி., வரு­வாய் குறை­வாக உள்ள மாநி­லங்­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து, அந்த மாநி­லங்­களில், ஜி.எஸ்.டி., வரு­வாய் ஏன் குறை­வாக உள்­ளது என்­பதை கண்­ட­றிந்து, வரி வரு­வாய் உயர்­வுக்­கான ஆலோ­ச­னை­க­ளை­யும், தீர்­வு­க­ளை­யும் வழங்க முடிவு செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, ஜி.எஸ்.டி., கவுன்­சில் அறி­வு­ரை­யின் பேரில், தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர் சுப்­ர­ம­ணி­யன், அடுத்த வாரம், பஞ்­சாப், பீஹார், சத்­தீஸ்­கர் உள்­ளிட்ட மாநி­லங்­களின் நிதி அமைச்­சர்­க­ளு­டன் விவா­திக்க உள்­ளார். அப்­போது, ஜி.எஸ்.டி., வரு­வாய் குறை­வுக்­கான கார­ணங்­களை அலசி, உரிய தீர்வு காணப்­படும் என, தெரி­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

தமி­ழ­கம் – ஆந்­திரா – தெலுங்­கானா :
ஜி.எஸ்.டி., அமல் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வரி வரு­வாய் பற்­றாக்­குறை, இதர மாநி­லங்­களை விட, தமி­ழ­கம், குஜ­ராத், தெலுங்­கானா, ஆந்­திரா, மேற்கு வங்­கம் மற்­றும் டில்­லி­யில், 20 சத­வீ­தத்­திற்­கும் குறை­வாக உள்­ளது.

முந்­தைய, ‘வாட்’ வரி விகி­தத்தை விட, ஜி.எஸ்.டி.,யில், மாநி­லங்­களின் பங்­கான, எஸ்.ஜி.எஸ்.டி., வரி குறை­வாக இருந்­தா­லும், வரி வரு­வாய் பற்­றாக்­குறை அதி­க­ரிக்­கும். புதிய வரியை நடை­மு­றைப் படுத்­து­வ­தில் உள்ள சுணக்­கத்­தா­லும், வசூல் குறை­ய­லாம். வாங்­கும் சக்தி குறை­வாக உள்ள கார­ணத்­தா­லும், மாநி­லங்­களின் வரி வரு­வா­யில் பற்­றாக்­குறை ஏற்­பட வாய்ப்­புண்டு.

-அபிஷேக் ஜெயின், பங்குதாரர், எர்னஸ்ட் அண்டு யங்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)